- Prep
- 5 min
- Cook
- 10 min
- Cuisine
- Indian
- Course
- Drinks
நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலை ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி குடித்து பாருங்க. சில நாட்களிலேயே உடல் எடையை அதிகரிக்கும். நாம் சேர்க்கபோகும் பொருள் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் உள்ளது. காலை உணவோடு சேர்த்து இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சத்துக்களும் கலோரிகளும் அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. சரி இந்த ஸ்மூதியை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் பால், தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு டம்ப்ளரில் ஊற்றி சிகிது நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக குடிக்க சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!






