சம்பளம் பணத்தை சிறிது நேரம் இதில் வைத்த பின் பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட வீணா ஆகாது!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை சம்பாதிக்கும் பணம் போதவில்லை என்ற ஒன்றுதான். என்னதான் நாம் சிக்கனமாக வாழ்ந்தாலும் மருந்து செலவுகள் என வரும் பொழுது பணம் வீண்விரயம் ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனால் குடும்பம் நடத்துவதற்கு பணம் இல்லாமல் நாம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இப்படித்தான் பலரும் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். பணத்தை சேமிப்பதற்கு முதலில் நாம் வீண்விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

-விளம்பரம்-

சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் செலவழிந்தாலே அது நமக்கு நல்ல சேமிப்பிற்கான வழியை தான் தேடி கொடுக்கும். அப்படி நாம் வாங்கும் பணம் செலவழியாமல் பல மடங்கு பெருக ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சம்பள பணம் விரையம் ஆகாமல் பெருக பரிகாரம்

அந்த காலத்தில் எல்லாம் பணம் வீட்டிற்கு வந்தவுடன் அந்த பணத்தை சாமியின் முன்பு வைத்து விளக்கு ஏற்றி வழிபட்ட பின்னர் தான் பணத்தை எடுத்து செலவு செய்வார்கள். இதுதான் பணத்தை சேமிப்பதற்கான முதல் வழி என்று சொல்லலாம்.பணம் என்பது மகாலட்சுமி தாயார் இன் அம்சம். பணம் நம்மிடம் வரும் பொழுது மகாலட்சுமி தாயார் நம்மிடம் வருகிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பணத்தை நாம் வாங்கியவுடன் வரும் வழியிலேயே செலவு செய்துவிட்டால் அவள் எப்படி நம்மிடம் வருவாள். அதனால் தான் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இம்முறையை கடைப்பிடித்து உள்ளார்கள். ஆனால் நாமோ இந்த காலத்தில் பணம் அக்கவுண்டில் ஏறியவுடன் பல செலவுகளுக்காக அதை நாம் அப்படியே பரிவர்த்தினை செய்து விடுகிறோம். எனவே அப்படி செய்யாமல் நமக்கு வரும் பணத்தில் ஒரு சிறிய பங்கையாவது எடுத்து சாமியின் முன்னர் வைத்து வழிபட்ட பின்னர் செலவு செய்ய வேண்டும்.

இப்படி பூஜை அறையில் வைத்து வணங்கும் முன்பு ஒரு நல்ல வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் ஒரு கைப்பிடி துவரை பருப்பு வைத்து அதை அதை பூஜை அறையில் வைத்து அதன் மேல் நீங்கள் வாங்கிய சம்பளப் பணத்தை வைத்து விளக்கேற்றி வணங்கிய பிறகு பணத்தை வேறு எந்த காரியத்திற்கும் செலவழித்தால் நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீண் விரயம் ஆகாது. இந்த வெற்றிலை துவரை, பச்சை கற்பூரத்தை ஒரு பேப்பரில் சுருட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் கூட வைத்துக் கொள்ளலாம் தவறில்லை.

வீண் செலவை தடுக்கும் துவரம் பருப்பு

இந்த துவரம் பருப்பிற்கு பணத்தை வீண்விரயம் செய்யாமல் சேமிக்கும் தன்மை அதிகம். அதனால் தான் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் துவரம் பருப்பை பயன்படுத்துகிறார்கள். அன்னபூரணி தாயாரை வீட்டில் வைத்து வணங்குபவர்கள் அரிசிக்கு பதில் துவரம் பருப்பினை வைத்து வணங்கினால் மிகவும் சுபிட்சமாக இருக்கும்.

-விளம்பரம்-

நாம் எந்த அளவுக்கு பணத்தை சேமிக்கிறோமோ அதைவிட முக்கியம் பணத்தை வீண் செலவு ஆகாமல் பார்த்துக் கொள்வது. வீண் செலவு என்பது நம்மையும் மீறி உண்டாகுமே தவிர நம்மளால் உண்டாக்கப்படுவது இல்லை. எனவே வீண் செலவு இல்லாமல் நல்ல முறையில் பணத்தை சேமித்து நல்வாழ்வை வாழ்வோம்.