கனவன் மனைவி பிரச்சனை தீர வேண்டுமா ? இந்த பொருள் படுக்கை அறையில் இருக்க கூடாது!

- Advertisement -

நான் வீட்டில் குடும்பங்களுக்குள் வரும் சந்தோசம், மகிழ்ச்சி, கஷ்டம், துன்பங்கள் என அனதைதையும் தீர்மானிப்பதற்கு பணம் தான் காரணமாக இருக்கும் என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் பணம் செல்வம் சொத்துக்கள் இல்லாவிடிலும் சில வீடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் குழப்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் என்னதான் காரணம் என்று யோசிக்கிறீர்களா. அது நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களால் ஏற்படும் எதிர்மறை ஆற்றலின் சக்தியாக கூட இருக்கலாம். உதாரணமாக இன்று நாம் நம் வீட்டின் படுக்கை அறையில் என்ன பொருட்கள் இருக்கக்கூடாது எதற்காக என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் இன்று தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

எதிர்மறை ஆற்றல் தரும் ஒவியம்

அந்த வகையில் இன்று நாம் வீட்டின் படுக்கை அறையில் ஓவியம் வைத்திருப்போம் அல்லவா ஆனால் அப்படி வைக்கப்படும் ஓவியங்களில் சில ஓவியங்களால் நம் வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம். சில எதிர்மறை ஆற்றலை தரக்கூடிய ஓவியங்களை நாம் படுக்கை அறையில் வைக்கும் போது எனது கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ள உறவில் விரிசிலை ஏற்படுத்திவிடும். ஆக நாம் வீட்டின் படுக்கை அறையில் எந்தெந்த ஓவியங்கள் இருக்கக்கூடாது என்பதனை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

சில ஓவியங்களே பழங்கால மன்னர்கள் போர் செய்யும் படியான காட்சிகளும், மக்கள் கொத்துக்கத்தாக இறந்து கிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். இது போன்ற ஓவியங்களை படுக்கை அறையில் வைக்க கூடாது ஏன் குழந்தை அழுவது போன்ற இருக்கும்போது ஒவியங்களை கூட படுக்கை அறையில் வைக்க கூடாது.

வேட்டைக்காரர்கள் தங்களின் இரையை தேடுவது போன்ற ஓவியங்களும். அதே வேட்டைக்காரர்கள் தங்களது இறையை கொண்று அருகில் வைத்திருப்பது போன்ற ஓவியங்களையும் படுக்கை அறையில் வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

ஒரு ஆண் பல பெண்களுடன் கல்யாண கோலத்தில் இருப்பது அல்லது பல பெண்களுடன் இருப்பது போன்ற ஓவியங்களையும் படுக்கை அறையில் வைக்க கூடாது அது கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் விரிசலை மட்டுமே ஏற்படுத்தும்.

-விளம்பரம்-

படுக்கை அறையில் இரண்டு முகமூடி இருப்பது போன்று ஓவியங்களே வைக்க கூடாது அப்படி வைப்பதன் மூலம் தம்பதிகள் அந்த முகமூடி போல ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ செய்யும் என்பதனால் இது போன்ற ஓவியங்களையும் படுக்கை அறையில் வைக்காதீர்கள்

சமீப காலங்களில் குழப்பமான முறையில் வரையப்படும் புது விதமான ஓவியங்களை படுக்கை அறையில் வைக்கக்கூடாது அதையும் மீறி வைத்தால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள் எப்போதும் குழப்பத்துடன் இருந்து கொண்டே இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here