Advertisement
சைவம்

ருசியான பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் இப்படி ஈஸியாக வீட்டிலே செய்து பாருங்க ! அசத்தலான சுவையில் இருக்கும்!!

Advertisement

நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடித்த உணவு வகை. பாக்கெட்டுகளில் விதவிதமான பெயர்களில் அடைத்து விற்கப்படும் நூடுல்ஸ், மசாலா கலவை பாக்கெட்டுகள் இலவசமாக கொண்ட நூடுல்ஸ்களை நாம் வாங்கி சாப்பிடுவதை விட வெறும் நூடுல்ஸ் வாங்கி அதில் நாமே வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். அதற்கான செய்முறை பதிவு தான் இது.

பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ் | Baby Corn Veg Noodles Recipe in Tamil

Print Recipe
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைஅனைவருக்குமே மிகவும் பிடித்த உணவு வகை. வீட்டில் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு சமைத்து சாப்பிடுவது தான் ஆரோக்கியத்திற்கு நன்மைதரும். அதற்கான செய்முறை பதிவு தான் இது.
Course Breakfast, dinner
Cuisine china, tamilnadu
Keyword Baby Corn Veg Noodles
Prep Time 15 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 188

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 பாக்கெட் நூடுல்ஸ்
  • 1/2 கப் பேபி கார்ன் ஓரளவு நீளமாக வெட்டியது
  • 1/4 கப் குடைமிளகாய் நறுக்கியது
  • 2 டீஸ்பூன் பூண்டு பொடியாக நறுக்கியது
  • 1/2 டீஸ்பூன் வெள்ளை வினிகர்
  • 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • ஸ்பிரிங் ஆனியன் சிறிது
  • 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில்
    Advertisement
    நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • Advertisement
    பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபிகார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்,
  • பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபிகார்ன் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விடவேண்டும்.
  • பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ரெடி!!!'

Nutrition

Serving: 250g | Calories: 188kcal | Carbohydrates: 27g | Protein: 4g | Sodium: 861mg | Fiber: 0.9g
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

4 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

5 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

7 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

9 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

10 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

11 மணி நேரங்கள் ago