உங்கள் வீட்டில் கெட்ட சக்தி இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா ? இந்த ஓரு செடி மட்டும் போதும்!

- Advertisement -

நாம் நம் வீட்டில் பல ஆண்டுகளாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செல்வசெழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனால் திடீரென்று வீட்டில் பல குழப்பங்கள் நிலவும், பிரச்சனைகள் வரும், குடும்பத்திற்குள் தகராறு மற்றும் தொழில் ரீதியான பிரச்சினைகள் என நாம் கால் வைக்கும் அனைத்து இடங்களிலும் பிரச்சனை கன்னிவெடி போல் வெடித்து சிதறும். அது மட்டுமில்லாமல் வீட்டில் சில அமானுஷ்யமான நிகழ்வுகளும் நடப்பதை நீங்கள் உணர்ந்து இருக்கலாம்.

-விளம்பரம்-

கற்பனைக்கு எட்டாத நிகழ்வு

ஆம் வீட்டில் நீங்கள் மட்டும் இல்லை வேறு ஒரு ஆள் இருப்பது போன்ற உணர்வுகள் வரலாம் நீங்கள் தூங்கும் பொழுது யாரோ ஒரு நபர் உங்கள் மேல் படுத்து உங்களை அழுத்துவது போல ஒரு உணர்வுகள் வரும். உங்களின் கற்பனைக்கு எட்டாத சில நிகழ்வுகளும் நடக்கலாம் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் பொழுது இதெல்லாம் பில்லி சூனியம் பேய் பிசாசு அதன் வேலையாத்தான் இருக்கும் என்று உடனடியாக முடிவு எடுத்து விடாதீர்கள். அதையும் தாண்டி இந்த பிரச்சனைகளை சரி செய்ய போகிறேன் என்ற பெயரில் போலி சாமியார்களிடம் பணம் கொடுத்து பணத்தை விரையமாக்காதீர்கள்.

- Advertisement -

பூ

வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய மந்திர தாந்திரீகத்தில் பல வழிகள் இருந்தாலும் முதலில் இதை செய்து பாருங்கள் பொதுவாக நாம் சிவபெருமானை வழிபடும் போது அவருக்கு பிடித்தமான வில்வ இலையை வைத்து வழிபடுவது தான் வழக்கம். ஆனால் சிவபெருமானுக்கு பிடித்த ஒரு பூ இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. ஆம், அதையும் அவர் தம் தலையிலேயே வைத்திருப்பார்.

தும்பை பூ

ஆம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பூ தும்பை பூதான் அந்த தும்பை பூவே சிவபெருமான் அவர் தலையிலேயே அணிந்து இருப்பார். அப்படிப்பட்ட தும்பைச் செடியை நம் வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது அதுதான் சிவபெருமானின் அம்சம் பொருந்திய பூவாகிவிட்டதே அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் ஏதேனும் இருந்தால் தும்பை பூ உடனடியாக வாடிவிடும். இதற்காக நீங்கள் தும்பை செடியாகவும் எடுத்துட்டு வரலாம் அல்லது தும்பை செடியில் பூவுடன் கூடிய ஒரு கிளையை உடைத்து எடுத்து வரலாம்

பதில் கிடைக்கும்

இந்த தும்பை பூவை சிவபெருமான் தன் தலையிலேயே அணித்திருப்பதால் இதற்கு அதிக மகத்துவம் உண்டு அதன் காரணமாக கெட்ட சக்தி உள்ள இடங்களில் இந்த தும்பை செடியை நட்டு வைத்தால் அந்த இடத்தில் அந்த கெட்ட சக்தியால் இருக்க முடியாது அதன் காரணமாக உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்கள் இருந்த இடத்திலிருந்து கீழே வீழ்வது போன்ற சில அமானுஷ்யமான நிகழ்வுகள் கூட நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அதனால் நீங்கள் கெட்ட சக்தி இருக்கிறது என்று நினைக்கும் இடத்தில் இந்த தும்பை செடியை கொண்டு செல்லுங்கள் அதற்கான பதில் உங்களுக்கு அப்பொழுதே கிடைத்துவிடும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here