கெட்ட சக்திகள் வீட்டிற்குள் வராமல் தடுக்க நிலை வாசலில் இதை செய்யுங்கள்!

- Advertisement -

என்னதான் நம் வீட்டில் பூஜைகள் செய்து மகாலட்சுமி வீட்டிற்குள் வாசம் செய்ய வைத்தாலும். கெட்ட சக்திகள் வீட்டிலன் நிலை வாசல் வழியாக உள்ளே வரத்தான் செய்யும் கெட்ட சக்திகள் என்றால் பில்லி சூனியம் ஏவல் இவை மட்டுமல்ல இதையும் தாண்டி வீட்டிற்கு பொறாமை குணங்களுடன், கெட்ட எண்ணங்களுடன் வருபவர்களும், கண் திருஷ்டியை சேர்ப்பவர்கள் இதுவும் கெட்ட சக்திகள் தான். இது போன்ற கெட்ட சக்திகளும் நம்மையும், நம் வீட்டையும் வீட்டுக்குள் வராமல் பாதுகாக்க சில வழிமுறைகள் இருக்குகின்றன. அந்த வழிமுறைகளை நாம் சரிவர செய்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் நம் வீட்டிற்குள் வாசம் செய்ய முடியாது அதை பற்றி நாம் இந்த ஆன்மீக தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

நம் வீட்டில் கெட்ட சக்தி எதுவும் வராமல் இருக்க முதலில் நாம் பாதுகாக்க வேண்டியது நம் வீட்டின் நிலை வாசலை தான் அதற்காக முதலில் நிலை வாசலில் இருக்க வேண்டிய பொருள்களில் விநாயகர் தான் சில நபர்கள் தங்கள் வீட்டு முன் கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக கண்திருஷ்டி விநாயகர் படத்தை வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு பதிலாக கற்பக விநாயகர் படத்தை வாசலின் வெளிப்புற பக்கத்தை பார்த்தவாறு வைக்கலாம் கற்பக விநாயகர் நம்மளை பாதுகாக்கும் கவசமாக விளங்குவார். இதனால் எந்தவித கெட்ட எண்ணங்களுடன் பொறாமை குணங்களோடும் வீட்டையும் நம்மையும் எந்தவித கெட்ட சக்தியும் நெருங்காது.

- Advertisement -

மேலும் கண் திருஷ்டியில் இருந்து நம்மையும் நம் வீட்டையும் பாதுகாத்துக் கொள்ள நிலை வாசலில் கற்றாழையை கட்டி தொங்கவிடலாம் அல்லது வீட்டு வாசலில் கற்றாழை வளர்க்கலாம். இதற்கு முந்தைய தலைமுறைகளில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அவர்களது வீட்டின் நிலை வாசலில் கற்றாழை கட்டி தொங்கவிட்டு அதற்கு மஞ்சள் விட்டு குங்குமம் பொட்டும் வைத்திருப்பார்கள் இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் கண் திருஷ்டியில் இருந்து நம்மளை பாதுகாக்கும்.

அடுத்ததாக வெள்ளருக்கன் கட்டை, மஞ்சள் போன்றவற்றை கருப்பு கயிறுகளில் கட்டி விற்பார்கள் அல்லவா அதை வாங்கி உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி வைக்கலாம் ஏனென்றால் நீங்கள் வீதிகளில் நடந்து செல்லும் பொழுது திருஷ்டி கழித்தது பொருட்கள் அல்லது வேறு ஏதும் கெட்ட சக்திகளை கழித்து வீசப்பட்ட பொருட்களை நீங்கள் மிதித்து நடந்து வரும் பட்சத்தில் இது போன்ற கெட்ட சக்திகளை நிலைவாசலுடன் தடுத்து நிறுத்தும் சக்தி இந்த வெள்ளருக்கன் கட்டைக்கு உள்ளது ஆகையால் இதை நிலை வாசலில் கட்டி தொங்க விடுங்கள். இது போன்று உங்கள் வீட்டின் நிலை வாசலை பாதுகாத்தால் போதும் எந்தவித கெட்ட சக்தியாளையும் உங்களையும் உங்கள் வீட்டையும் நெருங்க கூட முடியாது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here