கழுத்தை இறுக்கி பிடிக்கும் அளவிற்கு உள்ள கடன் பிரச்சனை தீர வேண்டுமா ? இதை மட்டும் தானம் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

சந்திரன் நேய் பிறையில் தேய்ந்து கொண்டே போவதால் எதுவும் மாற்றங்கள் நிகழுமா என்று கேட்டால் கண்டிப்பாக ? சந்திரன் பௌர்ணமி முடித்து தேய ஆரம்பிக்கும்போது இந்த பிரபஞ்சத்தில் ஒரு விதமான மாற்றம் நிகழும். இந்த மாற்றத்தின் இறுதியானதை அம்மாவாசை என்று நாம் சொல்கிறோம். அப்படி வரும் இந்த அமாவாசையில் அதிகப்படியாக சக்திகள் வெளிப்படும். அந்த சக்திகளை நாம் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் கெட்ட விஷயத்திற்கும் பயன்படுத்தலாம். ஆனால் நாம் கேட்பதெல்லாம் கெட்ட விஷயங்கள் தான். இப்படி கெட்ட விஷயங்களை கேட்டு கேட்டு அம்மாவாசை என்றாலே ஒரு கெட்ட நாள் என்று நினைத்துக் கொள்கிறோம். இந்த தேய்பிறை நாள் சிவனின் அவதாரமான வைரவருக்கு மிகவும் உகந்த நாட்கள் என்று தெரியுமா ?

-விளம்பரம்-

கடன் பிரச்சனை தீர

இப்படி சிவனின் அவதாரமான பைரவரை நாம் தேய்பிறை அஷ்டமியில் வழிபடும் போது நமக்கு இருக்கும் தீராத கடன் பிரச்சனையும் நம் எதிரிகளுடன் இருக்கும் பகையும் சேர்ந்து அழிந்து விடும். அப்படி பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடும் போது பைரவரின் வாகனமான நாய்களுக்கு நாம் இன்றைய தினங்களில் பின்வரும் தானங்களை செய்து வந்தால் நம் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்பதை சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி என்னென்ன பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

- Advertisement -

தொழில் நஷ்டம்

இந்த தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு நாம் மிளகு தீபம் ஏற்றி அவருக்கு உரிய பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை விடுவித்து விடுவார். மேலும் சொந்தமாக தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருந்தாலும். அவர்களும் வைரவரை மனதார வேண்டி வைரவருக்கு செவ்வரளி மலர் சாற்றினால் அவர்களும் தாங்கள் வியாபாரத்தில் இழந்ததை எல்லாம் திரும்ப எடுத்து விடலாம்.

நாய்க்கு தானம்

இப்படி தேய் பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு அவரின் வாகனமான நாய்க்கு தானம் கொடுப்பது சிறந்ததாக இருக்கும். அப்படி பைரவரின் வாகனத்திற்கு என்ன தனம் கொடுப்பது தெரியுமா ? நாய்களுக்கு சப்பாத்தி கொடுப்பது நமக்கு அதிகமான பலன்களை கொடுக்கக் கூடியது வடநாடுகளில் அதிக அளவு சப்பாத்தி செய்கிறார்கள் அல்லவா அவர்கள் அவர்களின் பாவம் குறைவதற்காக பைரவரின் வாகனமான நாய்களுக்கு விசேஷமாக இந்த சப்பாத்தியை தானம் செய்வார்கள். இது மட்டும் இல்லாமல் கோதுமையால் செய்யப்பட்ட எந்த உணவுகளை நாம் நாய்களுக்கு தானமாக கொடுத்தாலும் நமக்கு அது நல்ல பலனை தரும்.

இதையும் தானம் கொடுக்கலாம்

பைரவரின் வாகனத்திற்கு இது மட்டும் தான் தானமாக கொடுக்க வேண்டும் என்று இல்லை மைதா மாவில் செய்யப்படும் பிஸ்கட் போன்ற பொருட்களையும் நாம் பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடும் போது அவருடைய வாகனமான நாய்க்கு தானம் செய்தால். நம்முடைய பாவங்கள் பாதியாக குறையும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதனால் உங்களால் முடிந்த அளவிற்கு தேய்பிறை அஷ்டமியில் நாய்களுக்கு இந்த தானத்தை செய்து பைரவரை வழிபடுங்கள் உங்களுக்கு பைரவரன நல்ல பலனையை கொடுப்பார்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here