கடன் பிரச்சனை தீர்ந்து ? உங்கள் வீட்டுக்கு பண வரவு அதிகரிக்க இதை செய்யுங்கள்!

- Advertisement -

இந்த உலகில் கடன் வாங்குவது என்பது ஒன்றும் தவறான செயல் இல்லை. ஆனால் நிறைய பேர் கடன் வாங்குதை சங்கடம் என கருதுகிறார்கள். அவர்கள் நினைப்பதும் ஒரு விதத்தில் நியாயமானது தான். நம்மால் எவ்வளவு தொகையை கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க இயலுமா அந்த அளவு தொகையை மட்டும் கடனாக வாங்கி பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்.

-விளம்பரம்-

ஆனால் நம்மளால் திருப்பி செலுத்த இயலாத அளவுக்கு கடன் தொகையை வாங்கிக் கொண்டு அந்த கடனை அடைக்க வேறு கடன் வேறு கடனை அடைக்க இன்னொரு கடன் என் அடுக்கடுக்கான கடன்களை வாங்கி சுமக்க முடியாத கடன் பாரத்தை சுமப்பவர்களை கண்டு தான் இங்கு பலரும் அஞ்சுகிறார்கள். அதனால் தீராத கடன் பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு உண்டான வழிகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம் வாருங்கள்.

- Advertisement -

பைரவர்

நாம் பொதுவாக அஷ்டமி நாட்களில் பைரவருக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டு வருவது சிறப்பானதாக இருக்கும். ஆனால் அதே அஷ்டமி செவ்வாய்கிழமை நாட்களில் வரும் அந்த நாள் மிகவும் அற்புதமான நாள். அன்றைய தினம் பைரவரை வழிபட்டு வருபவர்களுக்கு எப்பேர்பட்ட தீராத கடன் இருந்தாலும் படிப்படியாக கடன் தொல்லையிலிருந்து விடுபடுவார்கள். மேலும் பண வரவு உங்கள் வீட்டில் மெது மெதுவாக உயர தொடங்கும் உங்கள் வீட்டில் இருந்து தொலைந்த மகிழ்ச்சி, சிரிப்புகள், சந்தோசம் என அனைத்தும் மீண்டும் வரும்.

சகல யோகங்களும் வரும்

மேலும் இந்த நாளில் பைரவருக்கு சிவப்பூ அரளி பூ மாலை சூட்டி, செவ்வாடை சாத்தி, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்த வடை, தேன், பழம் போன்ற பொருட்களை நிவேதனமாக செய்து வைரவருக்கு விளக்காக வெள்ளைப் பூசணிக்காயில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி திருநீர் அபிஷேகம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் சகல யோகங்களும் வந்து சேரும் உங்கள் வீட்டில் தங்கமும் பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

லட்சுமி கடாட்சம்

செவ்வாய் கிழமையில் வரும் அஷ்டமி தினம் போலவே வெள்ளிக்கிழமை அன்று வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவதும் இன்னும் சிறப்பானதாக இருக்கும். இந்த தினத்தில் பைரவரை வழிபட்டு வருவதன் மூலம் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் செழிப்புடன் இருக்கும்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here