வீட்டிலயே ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் பீட்ரூட் இருந்தால் போதும் மைசூர் பாக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
மைசூர் பாக் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பீட்ரூட்டை வைத்து சுவையான மைசூர் பாக் எப்
மைசூர் பாக் பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பீட்ரூட்டை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இனிப்பு சுவையோடு பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலோட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மைசூர் பாக் ரெசிபியை டிரை பண்ணிப்பாருங்கள். பீட்ரூட் மைசூர் பாக்கின் ஸ்பெஷல் என்னவென்றால் பீட்ரூட்டை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை இவ்வாறு அசத்தலான மைசூர் பாக்காக செய்து கொடுக்கலாம். அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீட்ரூட்டில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான பீட்ரூட் இனிப்பு அடை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க நிறையவே பீட்ரூட் சாப்பிடுவாங்க!