Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Beetroot Mysore Pak
மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பீட்ரூட்டை வைத்து சுவையான மைசூர் பாக் எப் Photo: Recipes
முகப்பு/இனிப்பு பொருள்2024.02.18பதிப்பு · TA
இனிப்பு பொருள்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வீட்டிலயே ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் பீட்ரூட் இருந்தால் போதும் மைசூர் பாக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பீட்ரூட்டை வைத்து சுவையான மைசூர் பாக் எப்

PK
எழுதியவர்Prem Kumar18 பிப்ரவரி, 2024 அன்று 06:14 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
15 நிமிடம்
சமையல்
15 நிமிடம்
மொத்தம்
30 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
sweets

மைசூர் பாக் ‌பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. கோதுமை மைசூர் பாக், நெய் மைசூர் பாக், சாக்லேட் மைசூர் பாக் என பல்வேறு வகையான மைசூர் பாக்குகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே மைசூர் பாக் செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பீட்ரூட்டை வைத்து சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இனிப்பு சுவையோடு பீட்ரூட்டில் வைட்டமின் சி, ஃபோலோட், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் மைசூர் பாக் ரெசிபியை டிரை பண்ணிப்பாருங்கள். பீட்ரூட் மைசூர் பாக்கின் ஸ்பெஷல் என்னவென்றால் பீட்ரூட்டை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை இவ்வாறு அசத்தலான மைசூர் பாக்காக செய்து கொடுக்கலாம். அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

முக்கியமாக இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீட்ரூட்டில் மைசூர் பாக் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விசேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டில் செய்த இந்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருக்கும். இதை செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : சூப்பரான பீட்ரூட் இனிப்பு அடை இப்படி செஞ்சி கொடுத்து பாருங்க நிறையவே பீட்ரூட் சாப்பிடுவாங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுளில் கடலை மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மற்றொரு பவுளில் சர்க்கரை, பால் மற்றும் பீட்ரூட் சாறை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.

  4. 4

    சர்க்கரை கரைந்து நுரை வந்ததும் நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கை விடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.

  5. 5

    அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து நன்கு பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

  6. 6

    பின் ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக்கை ஊற்றி பத்து நிமிடங்களுக்கு பிறகு உங்கள் விருப்பப்படி துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் மைசூர் பாக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 43 கலோரி
  • கொழுப்பு · 3.5g
  • புரதம் · 6.1g
  • கார்போஹைட்ரேட் · 9.6g
தலைப்புகள்
#பீட்ரூட் இடியாப்பம்#பீட்ரூட் அல்வா#பீட்ரூட் இனிப்பு அடை#பீட்ரூட் மைசூர் பாக்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement