தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவாக தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா? அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த முறையில் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா ரெசிபியை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நூடுல்ஸ், பாஸ்தா போன்ற அயல் நாட்டு உணவுகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கலாம். என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது. ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம்.
எப்படி என்று யோசிக்கிறீர்களா? இந்த பாஸ்தாவுடன் நாம் ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை பயன்படுத்தலாம். ஆம் நாம் இந்த பதிவில் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட் சேர்த்து தான் செய்யப் போகிறோம். இந்த பாஸ்தா ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். டேஸ்டான சுவையான இந்த பாஸ்தா ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க. குறிப்பா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.
பீட்ரூட் பாஸ்தா | Beetroot Pasta Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 200 கி பாஸ்தா
- 2 கப் பால்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 தக்காளி
- 100 கி பீட்ரூட்
- 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு
- 1 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- சீஸ் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
- பின் அதிலிருந்து வரும் பன்னீரை ஒரு துணியில் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு தக்காளி மற்றும் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த தக்காளி, பீட்ரூட், நாம் எடுத்து வைத்துள்ள பன்னீர், பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கலந்து விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து நாம் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் சிறிதளவு சீஸ் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் பாஸ்தா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மசாலா பாஸ்தா இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!