- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
பாஸ்தா மேகி அப்படின்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அத நம்ம அவங்களுக்கு அடிக்கடி செஞ்சு கொடுக்கக் கூடாது ஆனாலும் எப்பவாவது ஒரு தடவை ஹெல்தியா நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு செஞ்சு கொடுத்தா நல்லது. உங்களுக்கு என்னென்ன காய்கறிகள் தேவையோ பீன்ஸ் கேரட் குடைமிளகாய் பச்சை பட்டாணி அப்படின்னா எந்த காய்கறிகள் வேணும்னாலும் சேர்த்துக்கலாம்.
தேவபட்டா உங்களுக்கு முட்டை பிடிக்கும்னா முட்டைய கூட பொரிச்சு சேர்த்துக்கலாம். ஆனா இப்ப நம்ம முட்டை இல்லாம காய்கறிகள் மட்டும் சேர்த்து செய்யப் போறோம். இதோட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த மசாலா பாஸ்தாவை ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு பாருங்க சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
ரொம்ப வே சிம்பிளான வீட்ல இருக்கக்கூடிய மசாலாக்கள் வைத்து இந்த மசாலா செஞ்சுடலாம். தக்காளி சாஸ் சோயா சாஸ் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கலாம் ஆனா அது சேர்த்தால் இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும். அப்படி உங்களுக்கு அது பிடிக்கலைன்னா அதை விட்டுட்டு வீட்டில் இருக்கிற மசாலாக்கள் மட்டுமே சேர்த்து செய்யலாம். இப்ப வாங்க இந்த சிம்பிளான மசாலா பாஸ்தாவ எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : எளிமையான பாஸ்தா சாலட் காலை உணவிற்கு இப்படி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு கடாயில் தண்ணீர் எண்ணெய் உப்பு சேர்த்து பாஸ்தாவை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பூண்டு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய கேரட் பீன்ஸ் குடைமிளகாய் பச்சை பட்டாணி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள் கரம் மசாலா தக்காளி சாஸ் டொமேட்டோ சாஸ் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.






