- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Italian
- Course
- Breakfast, evening
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களின் மிகப் பெரிய சவால் ஆரோக்கியமான சாப்பாடு. பெருந்தொற்றுக் காலத்தில் சத்தாகவும் சரிவிகிதத்திலும் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். உடலுக்குப் புரிந்தாலும் உணர்வுகளுக்கு அதெல்லாம் புரிகிறதா? அதிகரித்திருக்கும் ஸ்ட்ரெஸ் காரணமாகக் கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுக்கொண்டே வேலை பார்ப்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் சாலட். செய்வதும் எளிது. சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும். வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.
பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு முறையில் சாலட்கள் எப்போதும் முக்கியமானவை. சாலட்டில் அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. இது உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடையை குறைக்க உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. சாலட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவுவதோடு அது குடல் இயக்கத்தை திறம்பட செயல்பட வைக்கிறது. மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் பசிக்குதுன்னு சொல்றாங்களா? அவங்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாலட்டை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு உங்கள் வீட்டில் பாஸ்தா இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தா சாலட் செய்து கொடுங்கள். இந்த பாஸ்தா சாலட் செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பாஸ்தா சாலட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ இந்த சாலட் பதிவு உங்களுக்கு தான்.
இதனையும் படியுங்கள் : காலை உணவிற்கு ஏற்ற கொண்டைக்கடலை சாலட் இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்திருக்கும்!!!
Ingredients
Method
முதலில் வெள்ளை சுண்டலை 8 மணி நேரம் வரை ஊற வைத்து ஒரு கடாயில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் பாஸ்தாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், புதினா, கொத்தமல்லி, துளசி இலை ஆகியவற்றை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் வேகவைத்த சுண்டல், பாஸ்தா, நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய், புதினா, கொத்தமல்லி, துளசி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் துருவிய சீஸ், தேன், ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, ஒயிட் வினிகர், உப்பு, மிளகுத்தூள், பாஸ்தா மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாஸ்தா சாலட் தயார்.






