பெண்கள் வீட்டில் எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க ணே்டுமா ? இதை செய்யுங்கள் பழைய முறை தான் ஆனால் பயனுள்ளது!

- Advertisement -

பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பெண் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று மற்ற பிள்ளைகளிடம் சொல்லி வளர்ப்பார்கள். பெண் பிள்ளைகளை பொறுத்தவரை அவர்களிடம் மென்மையாகவும் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள். அவர்கள் வீட்டில் என்ன குறும்புத்தனம் செய்தாலும் அவர்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே செல்லம் கொடுத்து தான் வளர்ப்பார்கள். வீட்டில் இருக்கும் மற்ற ஆண் குழந்தைகள் எவ்வளவோ சிந்தித்து இருப்பார்கள் ஏன் தன் அக்காவுக்கு எவ்வளவு செல்லம் ? என் தன் தங்கைக்கு மட்டும் இவ்வளவு செல்லம் ? என்று அதற்கான சரியான விடையை இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலம் வாருங்கள்.

பெண்கள் தான் மகா லட்சுமி

என்னதான் வீட்டின் பெண் குழந்தைகளின் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசமும் அன்பும் இருந்தாலும் கூட ஒரு வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அதை பொருத்துதான் அந்த வீட்டின் சுபிக்ஷம் நிலைத்து நிற்கும். வீட்டில் இருக்கும் யார் பணம் சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக் கொள்பவராக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் எப்போதும் மகாலட்சுமியாகவே எண்ணுவார்கள். அதனால் தான் எந்த ஒரு வீட்டில் பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டு மனக்குறையுடன், பிரச்சனைகளில் இருக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லாம் வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடும்.

- Advertisement -

மண அழுத்தம் குறைய

இதன் காரணமாக வீட்டில் இருக்கும் பெண்கள் கஷ்டப்பட்டு மன நிம்மதி இல்லாத நேரத்தில் அவர்கள் அழுத்தமாக இருக்கும்போதும் கூட அவர்களை சரி செய்வதற்காக அந்த காலத்தில் சில விஷயங்களை செய்து வந்தார்கள் நாம் அதைப் பற்றி தான் இன்று காணப் போகிறோம் பொதுவாக அந்த காலத்து பெண்கள் வகுத்து தலைவாரி நெற்றியின் வகுப்பில் குங்குமம் ஏற்றி இருப்பார்கள் அதன்பின் தலை நிறைய பூ வைத்து நன்கு புடவை கட்டி சிவப்பு நிற பொட்டு வைத்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி பெண்கள் இருக்கும் போது அவர்களின் மன அழுத்தம், மன இறுக்கம் குறைந்தது அவர்களிடம் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதற்குரிய ஆற்றல் பெண்களுக்கு கிடைக்கும் என நாம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

பூ

ஆம் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் வெளியே எங்கு சென்றாலும் தலையில் பூ இல்லாமல் செல்ல மாட்டார்கள் அப்படி பெண்கள் தலையில் பூ வைப்பதால் எவ்வளவு நன்மைகள் உண்டாகும் என்று தெரியுமா ? இதை அறிவியல் பூர்வமாக அறிவியளாளர்கள் ஒத்துக் கொண்டார்கள். சில விஷயங்களை பெண்கள் எவ்வளவுதான் சொன்னாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் தலையில் வைத்திருக்கும் பூவில் இருந்து வரும் வாசனை அவர்களுக்கூ மனமாற்றத்தை கொடுக்குமாம். அப்படி அவர்கள் பூ வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் பிராண ஆற்றல் பெண்களுக்கு இலகிய மனத்தை கொடுத்து மனநிம்மதி அடையச் செய்கிறது.

-விளம்பரம்-

குடும்ப நிர்வாகம்

அதுமட்டுமில்லாமல் பெண்கள் தலையில் பூச்சூடிக் கொள்வதால் ஒரு விஷயத்தை அவர்கள் பல கோணங்களில் இருந்து சிந்திக்கும் ஆற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ஆற்றல் மல்லிகை பூ, முல்லை பூ, ஜாதி பூ இது போன்ற வாசனை மிகுந்த பூக்களை தலையில் சூடி கொண்டாள் பெண்களுக்கு ஆற்றல் அதிகம் கிடைக்கும். இதனால்தான் வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் பெண்கள் எடுக்கும் ஒரு முடிவு சரியானதாக இருக்கிறது. இதனால் தான் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் குடும்பத்தை சரியான முறையில் நிர்வாகித்து அந்த பிரச்சனை குடும்பத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here