வீட்டில் பணம் சேர்ந்து கொண்ட இருக்க வேண்டுமா இந்த ஒரு ஒரே செடி வளர்த்தால் போதும்!

- Advertisement -

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதிப்பட்டு தங்கள் வீட்டில் உள்ள சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தையும் இழந்து கடைசியில் சிரிப்பதற்கே கூட மறந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த பண பிரச்சனை அனைவரையும் வாட்டி வதைத்து விடும்.

-விளம்பரம்-

மல்லிகை பூ

ஆனால் நம் வீட்டில் தெய்வ அம்சம் பொருந்திய சில பொருட்களை வைப்பதன் மூலம் நமது வீட்டில் பண வரவை அதிகரித்து நமது வீட்டின் செல்வ வளங்களை பெருக்கிக் கொள்ளலாம். அதேபோல் நமக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளை தீர்த்து விடும். அந்த வகையில் நாம் வீட்டில் அழகுக்காகவும், பொழுதுபோக்காகவும் வளர்க்கும் செடிகள் கூட நம் வீட்டின் சூழ்நிலைகளை தீர்மானிக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நமது வீட்டில் மல்லிகை பூ செடி வளர்த்தால் அந்த மல்லிகை பூவிலிருந்து வரும் மணம் நம் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். மேலும் நம் மனதில் இருக்கும் காதலை தூண்டி விடக் கூடிய சக்தி மல்லிகை பூவுக்கு உண்டு. மல்லிகை பூ மேலும் நம் மனதை மகிழ்ச்சியாகவும், இலகுவாகவும் வைத்திருக்கும்.

- Advertisement -

துளசி

மேலும் அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய செடி என ஆன்மீக ரீதியாக அனைத்து இதிகாசங்களும் சொல்லும் செடி என்றால் அது துளசி தான். விஷ்ணு பகவானை நினைத்து நாம் செய்யும் எந்த பூஜைகளும் துளசி இல்லாமல் நிறைவு செய்ய முடியாது. அதனால் துளசி செடியை வேறு எந்த செடியுடனும் ஒப்பிட முடியாத மகத்துவம் வாய்ந்தது. துளசியில் இருந்தும் வெளியேறும் வாசனை பெண்களின் கருப்பையை வளமாக வைத்திருக்க உதவும். மேலும் இந்த துளசி செடியின் இலைகளின் முதல் வேர் வரை அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளமாக கொட்டி கிடைக்கின்றன.

வாடா மல்லி

உங்கள் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய செடிகளில் வாடாமல்லியும் ஒன்று இந்த பூவிலிருந்து வாசனை எதுவும் வராது இருந்தாலும். இந்த வாடாமல்லி பூ எளதில் வாடி போகாது. அது போல உங்கள் குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி எப்போதும் வாடாமல் நிலைத்திருக்க உதவும். மேலும் இந்த வாடா செடியை நம் வீட்டில் வளர்க்கும் பட்சத்தில் அது நமது வீட்டுக்கு பணம் வரவை அதிகரிக்கும், வீட்டில் செல்வ வளங்களையும் பூத்துக் குலுங்க செய்யும். ஆனால் வாசனை இல்லாத ஒரே காரணத்தினால் இந்த செடியை நம் வீடுகளில் வளர்ப்பதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here