தாய்பாலுக்கு நிகரான தேங்காய் அப்படி என்ன இருக்கு ?

- Advertisement -

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதன்பின் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் இருக்காது. அது போல தான் பாரம்பரியமாக உணவுகளில் தேங்காய் இருப்பதன் பின்னாடி பல விதமான காரணங்கள் இருக்கிறது. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து வரும் பொருள்கள் என பல்வேறு வகையில் தேங்காய் மூலம் பயனடைந்து கொண்டிருக்கிறோம். நாம் உணவு சங்கிலிகளில் தேங்காய் முக்கிய இடத்தில் இருப்பதற்க ஏராளமான காரணங்கள் இருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அலசிமர் நோய் குணமடையும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : பதப்படுத்தபட்ட உணவுகளை சாப்பிட்டால் உங்கள் ஆயுள் காலம் குறையும்!

- Advertisement -

இப்படி நாம் பயன்படுத்தும் தேங்காயின் பல ரகசியங்கள் உள்ளனர் மேலும் தேங்காயில் உள்ள தாது பொருட்கள், விட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் பற்றி நான் சொல்லவே தேவையில்லை ஏனென்றால் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தேங்காய் எண்ணெயை நம் சருமத்தில் தேய்த்து கொள்வதால் நமது சருமம் பாதுகாக்கப்படுகிறது உடலில் உள்ள ஈரப்பதத்தையும் பாதுகாக்கிறது. இப்படி பல்வேறு வகையில் பயனுள்ளதாகவும் மற்றும் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும் தேங்காய் பற்றி இந்த உடல் நலத் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம் வாருங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

தேங்காய் உணவோடு எடுத்துக் கொள்வதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் மற்றும எல்லாம் காப்பிரிக் அமிலம் இரண்டும் நம் உடம்பில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திறன் கொண்டவை.

இதயம்

தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்ற கொழுப்புகள் போல் இருக்காது. தேங்காயில் உள்ள கொழுப்பு நாம் உடம்பில் கொழுப்புகளை அதிகரிக்காது அதனால் உங்கள் உடம்பில் கொலஸ்ட்ரால் கூடுவதற்கான வாய்ப்பு இல்லை மேலும் மாறாக நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து. நாம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்காக தேங்காய் பெரிதும் உதவியாக உள்ளது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : உடம்பில் உள்ள கழிவுகளை நீக்க எளிய வழி!

மலசிக்கல்

தேங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தேங்காய் ஒரு தீர்வாக அமையும் மேலும் காலை இரவு என தேங்காய் எடுத்துக் கொண்டு வந்தால் நாம் வயிற்றில் பூச்சிகள் தொல்லை இருக்காது. மேலும் தேங்காய் உள்ள மோனா லாரின் என்று அமிலம் வைரஸ்களின் செல் சுவர்களை கரைக்கும் திறன் உள்ளது.

ஆண்டிபயாடிக்

கடைசியாக தேங்காய் ஓரு ஆண்டிபயாட்டிக் ஆகவும் இருந்து உங்கள் உடம்புக்கு பாதுகாப்பு தரும். தேங்காய் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் சில அலர்ஜியிலிருந்து உங்களை பாதுகாக்கின்றது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here