வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு தெய்வங்களை தான் நாம் அணுகுவோம். தெய்வங்களின் அருள் இருந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சினைகளும் சரியாகும். மேலும் நமக்கு இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கு நவக்கிரகங்கள் தான் காரணமாக இருக்கும். தெய்வத்தின் அருகில் இருந்தால் மோசமான கிரக நிலைமை கூட மாறி நல்ல நிலைமைக்கு செல்ல முடியும். அந்த வகையில் அனைவரையும் வாட்டி வதைக்கக்கூடிய பணம் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாக இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

மகாலட்சுமி வழிபாடு
அனைவருடைய வாழ்க்கையிலும் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பணம் இல்லாமல் நம்மால் வாழ்வே முடியாது அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு போதுமான வாய்ப்பை நாம் பெற வேண்டுமென்றால் மகாலட்சுமி தேவியாரின் அருள் நமக்கு தேவைப்படும். மகாலட்சுமி தேவியாரின் அருள் முழுவதுமாக கிடைக்க வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்திற்கு ஒரு வெற்றிலை ஐந்து ரூபாய் நாணயம் பச்சை கற்பூரம் அனைத்தும் தேவைப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் வீட்டில் பூஜை செய்யும் போது தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக ஒரு வெற்றுலகை வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயம் பச்சை கற்பூரம் வைத்து மகாலட்சுமி தேவியாரின் ஸ்தோத்திரங்களை படிக்க வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு தீபம் அப்படியே ஒரு மணி நேரம் ஆவது எரிய வேண்டும் பிறகு தீபத்தை குளிர வைத்துவிட்டு வெற்றிலையை மடித்து பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். வாழ்ந்து வரும் வெள்ளிக்கிழமை புதியதாக மாற்றி வைத்து பணப்பெட்டியில் வைக்க வேண்டும். பழைய வெற்றிலையை எடுத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விடலாம். இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை மகாலட்சுமி தாயாரை நினைத்து வெள்ளிக்கிழமை செய்து மகாலட்சுமி தாயார்ன் அருளையும் முழுவதுமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
இதனையும் படியுங்கள் : குடும்ப கஷ்டத்தை நீக்கக் கூடிய தீக்குச்சி பரிகாரம்!!


