மங்களகரத்தின் அடையாளமாக வெற்றிலை கருதப்படுகிறது. அனைத்து விசேஷங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை கட்டாயமாக இருக்கும் வெற்றிலை இல்லாமல் எந்த பூஜையும் துவங்குவது கிடையாது. வெற்றிலை தாம்பூலம் வைத்து நல்ல காரியம் செய்யும் பொழுது அந்த காரியம் வெற்றி பெறும் என்பது சாஸ்திரங்கள் கூறும் ஐதீகம். வெற்றிலையை மகாலட்சுமிக்கு தீர்த்தமாக வைத்து வழிபடும் முறையையும் அதனுடைய பலன்களை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றிலை கொடி

அனைத்து விசேஷங்களிலும் முதன்மையாக திகழக்கூடிய வெற்றிலையை வீட்டில் வெற்றிலை கொடி போன்று படர்ந்து வளர வைத்திருந்தால் அந்த வீட்டில் சுபகாரியங்களுக்கு தடை இருக்காது. மங்களகரமான இந்த வெற்றிலையில் தீர்த்தம் வைத்து வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமியை வழிபட வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பணக்கஷ்டங்களும் தீர்ந்துவிடும்.
வழிபாட்டு முறை
வெள்ளிக்கிழமை என்று அதிகாலை எழுந்து குளித்து விட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு பூக்களால் அலங்காரம் செய்து தீர்த்த கலசம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் சிறிய பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்ப வேண்டும். இப்போது கலசத்தில் மஞ்சள் தூள் ஜவ்வாது தூள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் நன்னாரி வேர் வெட்டிவேரையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை முக்கியமாக சேர்க்க வேண்டும் தெய்வீக வாசம் மணக்க ஆரம்பிக்கும். இப்பொழுது ஒரு நல்ல வெற்றிலையாக பார்த்து எடுத்து அதனை சுத்தம் செய்து அதன் நுனி பகுதியை கலசத்தில் கொள்ளும் காம்பு பகுதியை மேல் நோக்கியும் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியாருக்கு முன்பு வைத்து மகாலட்சுமிக்கு ஏதாவது ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
தீபம் ஏற்றும் முறை
இதனோடு சேர்த்து மகாலட்சுமி தேவியாருக்கு தீபம் ஏற்ற வேண்டும். எப்பொழுதுமே மகாலட்சுமி தாயார் தீபம் ஏற்றும் பொழுது ஒற்றை திரி போடக்கூடாது இரண்டு திரியை ஒன்றாக சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். மேலும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றும் போது நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றித்தான் தீபம் ஏற்ற வேண்டும் மற்ற எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றக்கூடாது. தீபம் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு கலசத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்தை வெற்றிலையால் வீடுகளில் இருக்கும் மூலை முடுக்குகள் அனைத்திற்கும் தெளிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் துர் சக்திகள் தீய எண்ணங்கள் அனைத்தையும் விரட்டி அடிக்க இது ஒரு நல்ல தீர்த்தம். இந்த தீர்த்தத்தை அனைத்து இடங்களிலும் தெளித்த பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த வழிபாட்டை செய்து வருவது மிகவும் நல்லது. வீட்டில் மட்டுமில்லாமல் தொழில் செய்யும் இடத்திலும் வியாபாரம் செய்யும் இடத்திலும் இந்த வெற்றிலை தீர்த்தத்தை தெளிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்


