- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வெண்டைக்காய், சமையலுக்கு பயன்படுத்தும் பொதுவான காய்கறி தான். தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இது சமைப்பதற்கு எளிதானதும் கூட. ஆனால், ஏனோ பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை.
எல்லோருக்கும் வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி வகையாக இருக்கும். ஆனால் அதை சரியாக சமைக்கா விட்டால் அதன் பிசுபிசுப்பு தன்மை அதனை வெறுக்க வைத்து விடும். ஆனால் வெண்டைக்காய் மசாலாவாக இப்படி ஒரு முறை செய்து கொடுத்தால், இனி அடிக்கடி இதைத்தான் வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். வெண்டைக்காயினை நாம் இவ்வாறு சமைத்து கொடுப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவர். மேலும், காரசாரமாக வேண்டுமென்று வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்களா? நிச்சயம், இந்த உணவு அவர்களுக்கு பிடிக்கும்.
இதனை செய்வதற்கு சில மசாலா பொருட்களையும் நாம் சேர்க்கிறோம். அதனால், அதிக சுவை கொண்டதாக இந்த வெண்டைக்காய் மசாலா இருக்கும். வெண்டைக்காய் அடிக்கடி வாங்கி, நன்கு சுவையாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் கிடைக்கும். மேலும் இது உடலில் சிறுநீரைப் பெருக்கும், நாள்பட்ட கழிச்சல் நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். அதிலும் அந்த வெண்டைக்காயை மசாலா போல் செய்து, சாதத்தோடு போட்டு சாப்பிட்டால் அதன் சுவைக்கு அளவே இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சுட சுட வெண்டைக்காய் வறுவல் சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பருக்கை கூட மிச்சமாகாது!
Ingredients
Method
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு ஒரு துணியில் ஈரம் போக துடைத்து பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து முக்கால் பதம் வரை வதக்கி எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர மொக்கு சேர்த்து கொள்ளவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் இதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து அதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வெண்டைக்காய் வெந்ததும் தயிர், சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும். பின் கொத்தமல்லி தழை, கஸ்தூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தாபா ஸ்டைல் பிந்தி மசாலா தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.






