- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
தமிழ்நாட்டில் காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சரியான சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார், குருமா என்று செய்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் வேண்டுமா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலையும், கருப்பு உளுந்தும் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட பொடி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்.
தானிய வகையைச் சேர்ந்த கருப்பு உளுந்து உங்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை நிவர்த்தி செய்யவும் உதவும் மூலப்பொருட்கள் கருப்பு உளுந்தில் உள்ளன. அதுமட்டுமின்றி, வயிற்றுப்போக்கை எதிர்த்துப் போராட கருப்பு உளுந்து உதவுகிறது. கருப்பு உளுத்தம் பருப்பில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், அவை உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க சிறந்ததாகும். இப்படிப்பட்ட கருப்பு உளுந்தில் இட்லி பொடி செய்யும் போது, அந்த இட்லி பொடி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட.
சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் இட்லி பொடியை விட இப்படி இட்லி பொடி செய்தால், இதுவரை இட்லி பொடியை விரும்பி சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான கருப்பு உளுந்து இட்லி பொடியை ஒரே நாளில் சுலபமாக செய்திடலாம். இந்த பொடி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு மாதத்திற்கு ஸ்டோர் பண்ணி வைத்து சாப்பிடலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து இட்லி பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வேர்க்கடலை பொடி செஞ்சு பாருங்க ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கருப்பு உளுந்து, பொட்டுக்கடலை, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின் சீரகம், மிளகு, கறிவேப்பிலை, வெள்ளை எள், பச்சரிசி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மிளகாயை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.






