Home காலை உணவு இந்த பிரெட் ஆம்லெட் டோஸ்டை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் காலை உணவை சுவையாக்குங்கள்!

இந்த பிரெட் ஆம்லெட் டோஸ்டை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களின் காலை உணவை சுவையாக்குங்கள்!

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காலை உணவில் சரிவிகித ஆரோக்கியம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து விட முடியும். இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப்போனவர்கள் பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இதில் இருக்கும் சத்துக்கள் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பிரெட் ஆம்லெட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை செய்வதற்கு வெகு குறைவான பொருட்கள் மற்றும் குறைந்த நேரமே எடுக்கும். இதை பிரட் மற்றும் முட்டையை கொண்டு செய்வதினால் இவை உடம்பிற்கும் மிகவும் நல்லது.

மேலும் சமைக்க கற்றுக் கொள்பவர்கள் கூட இதை மிகவும் எளிதாக முதல் முறையிலேயே சரியாக செய்து விடலாம். அத்தோடு இவை அவசரகால கட்டங்களில் குழந்தைக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விட்டாலோ அல்லது ஆபிசுக்கு நேரமாகி விட்டாலோ, குறுகிய நேரங்களில் செய்யக்கூடிய உணவுகளில் இல்லத்தரசிகளின் டாப் சாய்ஸாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிரட் ஆம்லெட் உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

Print
No ratings yet

பிரெட் ஆம்லெட் டோஸ்ட் | Bread Amblet Toast Recipe In Tamil

தினமும் இட்லி, தோசை, உப்புமா என்று அரைத்த மாவையே அரைத்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள் இது போல புதுசாக ஏதாவது முயற்சி செய்யலாம். காலையில் எழுந்ததுமே நாம் சிற்றுண்டி சாப்பிடுவது அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். எப்பவுமே காலை உணவை மட்டும் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலை உணவை தவிர்த்தால் உடலுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படும். காலை உணவில் சரிவிகித ஆரோக்கியம் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து விட முடியும். இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப்போனவர்கள் பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இதில் இருக்கும் சத்துக்கள் மூலம் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள்.
Prep Time10 minutes
Active Time5 minutes
Total Time15 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Bread Amblet Toast
Yield: 2 People
Calories: 67kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தவா

தேவையான பொருட்கள்

  • 6 பிரெட்
  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 1 கேரட்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி இலை, மிளகுத்தூள், மஞ்சள்தூள், கேரட் துருவல், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து எல்லா இடங்களிலும் தேய்த்து விடவும். பின் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
  • அதன்பிறகு பிரட் துண்டுகளை முட்டை கலவையில் போட்டு இருபுறமும் திருப்பி போட்டு தோசை கரண்டியால் அழுத்தி விடவும்.
  • பின் ஒரு ஸ்பூன் பட்டரை எல்லா இடங்களிலும் தடவி நன்கு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பிரட் ஆம்லெட் டோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 67kcal | Carbohydrates: 3.6g | Protein: 6.4g | Fat: 4.5g | Saturated Fat: 1.7g | Sodium: 130mg | Potassium: 138mg | Vitamin A: 47IU | Vitamin C: 185mg | Calcium: 24mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!