ருசியான பிரட் சீஸ் பக்கோடா இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு என்னடா ஸ்னாக்ஸ்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ருசியான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

வகைகள் செய்து வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பத்து நிமிடத்தில் சூப்பரான டேஸ்டியான பிரட் ச்சீஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க, அவங்க வேண்டாம் என்று சொல்லாமல் தட்டில் இருக்கும் மொத்தத்தையும் காலி பண்ணிடுவாங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பப்ஸ் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பிரட் சீஸ் பக்கோடா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

பிரட் சீஸ் பக்கோடா| Bread Chees Pakkoda Receipe in Tamil

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள் செய்து கொடுக்க ரொம்பவே சிரமமாக இருக்கும். பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு என்னடா ஸ்னாக்ஸ் வகைகள் செய்து வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பத்து நிமிடத்தில் சூப்பரான டேஸ்டியான பிரட் ச்சீஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க, அவங்க வேண்டாம் என்று சொல்லாமல் தட்டில் இருக்கும் மொத்தத்தையும் காலி பண்ணிடுவாங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரட் சீஸ் பக்கோடா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Bread Chees Pakkoda, பிரட் சீஸ் பக்கோடா
Yield: 4 people
Calories: 680kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 8 பிரட்
  • 1 cup சீஸ்
  • 3 வெங்காயத்தாழ்
  • 2 பச்சை மிளகாய்
  • cup கடலை மாவு
  • சோடா உப்பு தேவையான அளவு
  • ½ tsp மிளகாய் தூள்
  • ¼ tsp மஞ்சள் தூள்  
  • பொரிக்க எண்ணெய்
  • தண்ணீர்                      தேவையான அளவு
  • உப்பு                              தேவையான அளவு

செய்முறை

  • பிரட் சீஸ் பக்கோடா செய்ய முதலில் சீஸ், நறுக்கிய வெங்காயத்தாழ், நறுக்கிய பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சோடா உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட் ஸ்லைஸ்களை லேசாக ரோஸ்ட் செய்யவும்.
  • பிரட் ஸ்லைஸ்கள் ஆறியதும் அவற்றை இரண்டாக வெட்டவும் , சீஸ் கலவையை பிரட் துண்டுகளின் நடுவே வைத்து, மாவு கலவையில் தோய்த்து பொரித்தெடுத்தால் சுவையான பிரட் சீஸ் பக்கோடா தயார்

Nutrition

Serving: 300gm | Calories: 680kcal | Carbohydrates: 6.7g | Protein: 41.3g | Fat: 55.8g | Saturated Fat: 29.6g | Polyunsaturated Fat: 2.5g | Monounsaturated Fat: 13.6g | Trans Fat: 1.9g | Cholesterol: 180mg | Sodium: 1704mg | Potassium: 305mg | Sugar: 5.3g | Calcium: 1288mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here