நினைத்த காரியம் நிறைவேற வாழ்வில் வெற்றி பெற பிரம்ம முகூர்த்தத்தில் இப்படி விளக்கேற்றுங்கள் போதும்!

- Advertisement -

விடியற்காலை வேளையில் எழுந்து காற்றை சுவாசித்தாலே அத்தனை நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் நடைபெறும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். விடியல் காலை 3 மணி முதல் 6 மணி வரை ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதால் அந்த நேரத்தில் எழுந்து சுவாசிப்பதே உடலுக்கு மிகவும் நல்லது என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் மார்கழி மாதத்தில் விடியற்காலையில் அனைவரும் எழுந்து கோலமிடுதல் கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றை வைத்தார்கள் முன்னோர்கள். இப்படி ஒரு மாதத்திற்கு இத்தனை பலன்கள் கிடைக்கும் என்றால் நமக்குத் தேவையானவைகளை வேண்டிக் கொண்டு விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து கொண்டால் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போகுமா என்ன? இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

-விளம்பரம்-

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை நான்கு முப்பது மணி முதல் 6:00 மணி வரை இந்த நேரத்தில் தீபம் ஏற்றி நமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் வேண்டிக் கொண்டால் அவை அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். முனிவர்கள் மகான்கள் எல்லாம் 3 மணி முதல் 5 மணிக்குள் பிரம்ம முகூர்த்த வழிபாடுகளை செய்வார்கள். ஏனெனில் இது தேவர்களுக்கான உகந்த நேரம் ஆகையினால் இதை அவர்கள் வழிபட பயன்படுத்துகிறார்கள். ஆகையால் நாமும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை அதாவது மூன்று முப்பது மணி முதல் 4:30 மணிக்கு தீபத்தை ஏற்றி இறைவனிடம் வழிபாடு செய்தால் நாம் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

தீபம் ஏற்றும் முறை

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பு மண்ணாலான தட்டு போன்ற அதாவது மண்பானைகள் கிடைக்கும் இடத்தில் மடக்கு என்று கேட்டால் ஒரு தட்டு போன்ற குழி உள்ள பாத்திரம் தருவார்கள். அந்த பாத்திரத்தை நன்றாக நீரில் ஊற வைத்து கழுவி காயவைத்துவிட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். அதில் கல் உப்பை நிரப்பி அதன் மீது ஒரு அகல் விளக்கை வைத்து அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சு திரியை போட்டு விளக்கேற்ற வேண்டும். பின் நம் வேண்டுதல்களை கூறி இறைவனிடம் வேண்டிக் கொண்டால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும் காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு முகம் பார்த்து எரியுமாறு ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த தீபத்தை ஏற்ற நீங்கள் காலையில் குளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. பல் துலக்கி கை கால் முகம் கழுவி விட்டு ஓம் நமச்சிவாய என்று கூறி விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு இந்த தீபத்தை நீங்கள் ஏற்றி வைக்கலாம். நீங்களும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை வேண்டி தங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதைக் கூறி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றும் பொழுது மூன்று நாட்களில் அந்த வேண்டுதல் நிறைவேறி விடும். சிலரது ஜாதகத்தில் ஏதாவது தசா புத்திகளில் பிரச்சனை இருந்தால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்த ஒரு வேண்டுதலையும் ஒரு மண்டலம் செய்தால் இன்னும் பலன் அதிகமாக கிடைக்கும். ஆகையால் 48 நாட்கள் பூஜை செய்து உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஒரு பரிகாரம் செய்யும் பொழுது முழு நம்பிக்கையுடனும் செய்யும் பொழுது அதன் பலன் கை மேல் கிடைக்கும்.