தெலுங்கான ஸ்டைல் வெங்காயம் தக்காளி இல்லாமல் கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க ரொம்ப அற்புதமாக இருக்கும்!

- Advertisement -

எல்லாருக்கும் எண்ணெய் கத்திரிக்காய் மசாலா அப்படின்ன ரொம்ப பிடிக்கும் .கத்திரிக்காயில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வச்சா  விரும்பி சாப்பிடாதவங்க  இருக்கவே மாட்டாங்க. எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுற எண்ணெய் கத்திரிக்காய் மசாலா வெங்காயம் தக்காளி சேர்க்காம ரொம்பவே சூப்பரா தெலுங்கானா ஸ்டைல  பண்ண போறோம். இந்த எண்ணெய் கத்திரிக்காய் மசாலாவ பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி

-விளம்பரம்-

எண்ணெய் கத்திரிக்காய் செய்து கொடுத்தா நல்லாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எண்ணெய் கத்திரிக்காய் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி சுவையான எண்ணெய் கத்திரிக்காய்  மசாலாவை செய்து சாதத்து கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். மசாலாவோட டேஸ்ட் மட்டும் இல்லாம கத்திரிக்காய் ரொம்ப அற்புதமான இருக்கும். எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மாதிரி தெலுங்கானா ஸ்டைல்ல கத்திரிக்காய் செய்து கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சுத்தமா எல்லாமே காலி ஆயிடும்.

- Advertisement -

அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த கத்திரிக்காய் மசாலா. அதுவும் தெலுங்கானா ஸ்டைல் வெங்காயம் தக்காளி இதெல்லாம் எதுவுமே இல்லாம சூப்பரா சிம்பிளா பண்ண போறோம். இந்த கத்திரிக்காய் மசாலாவை தக்காளி, வெங்காயம் இல்லாத டைம்ல வீட்ல இருக்குற மசாலா பொருட்களை யூஸ் பண்ணி ரொம்ப சூப்பரா இருந்த கத்திரிக்காய் மசாலா பண்ணிடலாம். சரி வாங்க ரொம்ப சுவையான இந்த தெலுங்கானா ஸ்டைல் கத்திரிக்காய் மசாலா வெங்காய தக்காளி இல்லாமல் எப்படி பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

கத்திரிக்காய் மசாலா | Brinjal Masala Recipe In Tamil

எண்ணெய் கத்திரிக்காய் செய்து கொடுத்தா நல்லாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எண்ணெய் கத்திரிக்காய் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி சுவையான எண்ணெய் கத்திரிக்காய்  மசாலாவை செய்து சாதத்து கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். மசாலாவோட டேஸ்ட் மட்டும் இல்லாம கத்திரிக்காய் ரொம்ப அற்புதமான இருக்கும். எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மாதிரி தெலுங்கானா ஸ்டைல்ல கத்திரிக்காய் செய்து கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சுத்தமா எல்லாமே காலி ஆயிடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Brinjal Masala
Yield: 4
Calories: 112kcal

தேவையான பொருட்கள்

  • 5 கத்திரிக்காய்
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா விதைகள், கடலை பருப்பு, உளுந்து இவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் வேர்க்கடலை, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதே கடாயில் காய்ந்த மிளகாய் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.வறுத்து எடுத்து ஆற வைத்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு , மஞ்சள்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  • பின் கத்தரிக்காயின் காம்புகளை நீக்காமல் சதை மட்டும் நான்காக கீறி விட வேண்டும்.அடுத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் எண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும்.
  • முக்கால் பதம் வதங்கிய பிறகு கத்தரிக்காய் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை கீறிய பகுதிக்குள் நன்றாக வைத்து மீண்டும் அதே எண்ணெயில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான தெலுங்கானா ஸ்டைல் எண்ணெய் கத்திரிக்காய் மசாலா தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 1g

இதையும் படியுங்கள் : கத்தரிக்காய், உருளைக்கிழங்கு வைத்து ருசியான கத்தரி உருளை மண்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!