- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்தவாறு சமைத்து பொறுமையாக ருசித்து சாப்பிட முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு செய்யாமல், வித்தியாசமான கந்தரிக்காய் மட்டன் குழம்பு செய்யுங்கள். அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள்.
மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அந்தவகையில் வித்தியாசமான கத்தரிக்காய் மட்டன் குழம்பு எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மட்டன் குழம்பை எப்போதும் போல் அல்லாமல் காரசாரமாக செய்து சாப்பிட நீங்கள் விரும்பினால் இந்த குறிப்பிட்டுள்ள ஸ்டைலில் கத்தரிக்காய் மட்டன் குழம்பு செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் தண்ணீர் ரசம் இப்படி செய்து பாருங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பாதி அளவு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் மட்டன் வேகவைத்து தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குழம்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அதனுடன் மட்டன், உப்பு, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் நாம் எடுத்து வைத்துள்ள மட்டன் வேகவைத்த தண்ணீரை ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் கத்தரிக்காய் மட்டன் குழம்பு தயார்.





