Advertisement
சைவம்

ருசியான ப்ரோக்கோலி பீன்ஸ் கூட்டு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்!!

Advertisement

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக இருந்தால், இந்த ப்ராக்கோலி பீன்ஸ் கூட்டை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள்.

இதனையும் படியுங்கள் : அவசியம் வாரம் ஒரு முறை ருசியான சிறுகீரை தேங்காய்பால் கூட்டு இப்படி செய்து பாருங்க!

Advertisement

இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் டயட்டில் இருந்தால், இந்த காம்பினேஷன் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். குழந்தைகளை மட்டுமல்ல சில பெரியவர்களையும் காய்கறி சாப்பிடு வைப்பது சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக ப்ரோக்கோலியை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் பீன்ஸ் ப்ரோக்கோலி வைத்து குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம்.

ப்ரோக்கோலி பீன்ஸ் கூட்டு | Broccoli Beans Kootu Recipe in Tamil

Print Recipe
நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக இருந்தால், இந்த ப்ராக்கோலி பீன்ஸ் கூட்டை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian
Keyword broccoli kootu
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 91

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 1/2 கப் கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கப் பீன்ஸ்
  • 2 கப் ப்ரோக்கோலி
  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1 கப் தேங்காய் பால்
  • உப்பு தேவையான
  • 1/4 கப் கொத்தமல்லி

அரைக்க

  • 2 டேபிள் ஸ்பூன் கடலை
  • 4 டேபிள் ஸ்பூன் தனியா
  • 2 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 5 வர மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு

Instructions

  • ப்ரோக்கோலி தண்டுகளின் தோலை‌ நீக்கி சின்னதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் பீன்ஸ் இரண்டையும் தனித்தனியாக வேக வைத்து பவுளில் தனியாக எடுத்து வைக்கவும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • வறுத்த பொருட்களை 1 கப் நீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது நிறம் மாறினதும் ப்ரோக்கோலி சேர்த்து 4 நிமிடம் வதக்கவும். பின் 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பின்னர் வேகவைத்த பீன்ஸ் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து கிளறி 3 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அவை கொதித்ததும் நாம் அரைத்து வைத்துக் வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறி 3 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்துக் கிளறவும்.
  • இரண்டு கொதி வந்ததும், உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். மேலே கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான பீன்ஸ் ப்ரோக்கோலி கூட்டு தயார். சாதம், சப்பாத்தி, நான், பரோட்டா அல்லது தோசை கூட சேர்ந்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 600g | Calories: 91kcal | Carbohydrates: 6g | Protein: 2.5g | Fat: 0.3g | Sodium: 33mg | Potassium: 316mg | Fiber: 2.4g | Vitamin A: 1548IU | Vitamin C: 89.2mg | Calcium: 47mg | Iron: 0.73mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago