Advertisement
சைவம்

ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் செய்வது இவ்வளவு சுலபமா? சில நிமிடத்தில் சுலபமாக பிரஷர் குக்கரில் செய்து விடலாமே!!!

Advertisement

பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. அவ்வகையில் இந்த பிஸிபேளாபாத் ப்ரவுன்ரைஸ் உயோகித்து செய்தால் அருமையாக இருக்கும். நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம்.

இந்த பதிவில் பிரவுன் அரிசி வைத்து பிஸிபேளாபாத் எப்படி செய்வது என்று பார்ப்போம் பிரவுன் அரிசி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் பழுப்பு அல்லது சிவப்பு அரிசியில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்த அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

Advertisement

நாளைக்கு காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்கு சுவையாக, சிம்பிளாக அதே சமையல் ஆரோக்கியமானதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, கை கொடுக்கும் ரெசிபி இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் . ரெசிபி சிம்பிளா செய்யலாம். ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி,  குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமான முறையில் இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் | Brownrice Bisibelabath Recipe In Tamil

Print Recipe
காலையில குழந்தைகளுக்கும் கணவருக்கும் லஞ்ச் பாக்ஸுக்குசுவையாக, சிம்பிளாக அதே சமையல் ஆரோக்கியமானதாக என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது,கை கொடுக்கும் ரெசிபி இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் . ரெசிபி சிம்பிளா
Advertisement
செய்யலாம்.ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி,  குழந்தைகள் விரும்பிசாப்பிடக்கூடிய ரெசிபி. மனமனக்கும் ரெசிபி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பாரம்பரியமானமுறையில் இந்த ப்ரவுன்ரைஸ் பிஸிபேளாபாத் பக்குவமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Brown Rice Bisibelaath
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 351

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் ப்ரவுன் ரைஸ்
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 பூண்டு
  • 1 துண்டு பரங்கிக்காய்
  • 4 கத்திரிக்காய்
  • 1 கப் பட்டாணி
  • 1 உருளை
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • புளி சிறிதளவு
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 1 தேக்கரண்டி சாம்பார்பொடி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 1 தேக்கரண்டி சாம்பார் பொடி

தாளிக்க

  • 1/2 தேக்கரண்டி கடுகு தாளிக்க தேவைக்கு ஏற்ப
  • 1/2 தேக்கரண்டி சீரகம் தாளிக்க தேவைக்கு ஏற்ப
  • 5 வெந்தயம் தாளிக்க தேவைக்கு ஏற்ப
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • முந்திரி தாளிக்க தேவைக்கு ஏற்ப
  • வெண்ணெய் தாளிக்க தேவைக்கு ஏற்ப

Instructions

  • காய்கறிகளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் பருப்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளாவும்.அதேகுக்கரில் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • காய்கள் நன்கு வெந்ததும் ப்ரவுன் ரைஸ், பருப்பு, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதன்பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்.
  • வாணலியில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பில்லை, முந்திரிசேர்த்து தாளிக்கவும், தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
  • மேலே கொத்தமல்லி தூவவும், சுவையான ப்ரவுன் ரைஸ் பிளிபேளாபாத் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 351kcal | Carbohydrates: 63.2g | Protein: 11.2g | Trans Fat: 4g | Calcium: 31mg | Iron: 2.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

2 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

5 மணி நேரங்கள் ago

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…

6 மணி நேரங்கள் ago

ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!

ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…

7 மணி நேரங்கள் ago