புதாதித்ய யோகம் உண்மையில் ஒரு அசாதாரண யோகமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். பொதுவாக சூரியனும் புதனும் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள். சூரியன்-புதன் இணைவுகாரணமாக 70-80% ஜாதகங்களில் புதாதித்ய யோகம் உருவாகிறது. பிறந்த ஜாதகத்தில் புத்தாதித்ய யோகம் இயல்பாகவே உள்ளவர்கள் மற்றவர்களை விட வாழ்க்கையில் அதிக வெற்றியைப் பெறுவார்கள். துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கங்கள் இருக்கும். அதனால் 12 ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

பணியிடத்தில் கிடைத்த பாராட்டுகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் நுட்பத்துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள். இந்த யோகம் பெரியவர்களின் ஆசிகளையும் பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும். இதனால் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில், பணம் சம்பாதிப்பதோடு கூடுதலாக, நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள், இது எதிர்காலத்தில் உங்களை நிதி ரீதியாக வலுவாக மாற்றும்.
ரிஷபம்

அரசு வேலையில் இருப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளைச் சந்திக்க நேரிடலாம் என்றாலும் அதனை சுபசெலவாக மாற்றிவிடுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்டிருந்த நன்மைகள் சுபகாரியங்கள் நிகழும். வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
மிதுனம்

தொழிலில் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக பணம் செலவாகும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நிதி நிலைமை வலுவடையும். வணிகர்களுக்கு நேரம் குறிப்பாக லாபகரமானதாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க அல்லது தொழிலை விரிவுபடுத்த நேரம் நன்றாக உள்ளது.
கடகம்

சொத்து சம்பந்தமான வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும். கமிஷன் பணிகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், கவனமாக இருந்தால் சுதாரித்துக் கொள்ளலாம். குறிப்பாக கல்விக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே சிக்கன நடவடிக்கை அவசியம். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம்.
சிம்மம்

நாலு ராசிகளும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களையேத் தரும். எதிர்பார்த்ததைவிட அதிக செலவாகிறதே என்ற கவலையை விடுங்கள். மரம் வைத்தவர் தண்ணீர் ஊற்றுவார் என்பதை மறக்க வேண்டாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். இதுநாள்வரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த ஒரு வாரம் நன்றாக இருக்கும். சூரியனின் பெயர்ச்சி ஒன்றே உங்களை ஓஹோ என உச்சத்தில் கொண்டு வைத்துவிடும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். சிலருக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசியினருக்கு சாதகமான காலம் இது. அக்டோபரில் மூன்று ராசிகள் வந்து சஞ்சரிக்கும் இந்த ராசிக்கு பணம் மழையாய் வந்து கொட்டும், வரும் பணத்தை முறையாக சேமித்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இந்த யோகம் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பை உருவாக்கும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிகம்

நிதி ஆதாயம் இருக்கும் மாதம் இது. ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடையலாம் என்றாலும் சோதனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
தனுசு

மனைவியின் தேவைகளை நிறைவேற்ற பணம் செலவிடப்படலாம். கடன் வாங்குவதாலும், கடன் கொடுப்பதாலும் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக செயல்படவும். தனிப்பட்ட வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். காதல் கைகூடும். திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அலை வீசும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களும் வெற்றி பெறுவார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது. பழைய முதலீடு செய்யப்பட்ட பணத்தில் பண இழப்பு ஏற்படலாம். செல்வச் செழிப்பு உண்டாகும். கடனில் ஒருபகுதியைத் திருப்பி அடைக்கும் வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியமும் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்தும் ஆதாயம் பெறலாம்.
கும்பம்

ஆடம்பர பொருட்கள் வாங்க பணம் செலவழிப்பீர்கள். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக ஆதாயமடைவார்கள், ஆரோக்கியத்திற்கு செலவழிக்க வேண்டியிருக்கலாம். இந்த யோகம், குழந்தைகள் விஷயத்தில் நல்ல செய்திகளை உண்டாக்கும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் அதில் சாதனைகள் நிகழ்த்துவார்கள்.
மீனம்

புதிய பொருட்களை வாங்க பணம் செலவாகும். விளையாட்டுத் துறையில் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி பண லாபம் இருக்காது. வீடு மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும். பூர்விக சொத்து தொடர்பான வில்லங்கள் இப்போது விலகும். வழக்குகள் சாதகமாகும். சகோதரர்கள் உதவுவார்கள்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியின் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் செல்வ செழிப்பை பெறப்போகும் சில ராசிகள்


