- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் குருமாவும் தான். சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள். ஆனால் முட்டைக்கோஸ் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் முட்டைக்கோஸ் குருமாவின் சுவையே தனி. குருமாவில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி வகைகளை சேர்த்து சமைப்பதால் ஆரோக்கியமான உணவு என்பதால் வாரம் ஒரு முறையேனும் குருமா குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த முட்டைக்கோஸில் குருமா செய்து அசத்துங்கள். இந்த முட்டைக்கோஸ் குருமா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி குருமா செய்யும் போது, அதில் முட்டைக்கோஸின் எந்த வாசனையும் வராது என்பதால் முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குருமா முட்டைக்கோசை வைத்து செய்த குருமாவாவா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு எல்லோரும் கேட்பார்கள். அந்த அளவுக்கு சுவை அசத்தலாக இருக்கும். இந்த அற்புதமான முட்டைக்கோஸில் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என உங்களுக்கு விருப்பமான காலை உணவுகளுக்கு ஏற்ற குருமா எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை போட்ட முட்டைக்கோஸ் சாதம் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
முதலில் முட்டைக்கோஸை தண்ணீரில் அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொரகொரப்பாக அரைத்த வெங்காயத்தை சேர்க்கவும். பின் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வதக்கவும். இதில் நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் எண்ணெய் பிரிந்து வர வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து குருமாவுடன் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விடவும்.
இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும். இது சாதம் சப்பாத்தி இட்லி தோசை எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முட்டைக்கோஸ் குருமா தயார்.






