குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்துச்சுன்னா இப்ப நம்ம சொல்ல போற இந்த சூப்பரான முட்டைக்கோஸ் சாதத்தை செஞ்சு குடுங்க. கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம குழந்தைகள் சூப்பரா சாப்பிட்டு வருவாங்க. எப்பவுமே டிபன் பாக்ஸ்க்கு ஒரே மாதிரியா புளிசாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம்ன்னு கொடுத்து விடாமல் முட்டை முட்டைக்கோஸ் கேரட் எல்லாமே சேர்த்து செஞ்ச சூப்பரான முட்டைகோஸ் சாதம் செஞ்சி கொடுத்து விடுங்க. காய்கறிகள் முட்டை இருக்கிறதால குழந்தைகளுக்கு இது ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு உணவு அப்படின்னு சொல்லலாம்.
எப்பவுமே ஒரே மாதிரியா குழம்பு காய் அப்டின்னு வச்சு போர் அடிச்சு போயிடுச்சுன்னா ஒரு நாள் இந்த மாதிரி மதியம் லஞ்சுக்கு முட்டைகோஸ் சாதம் செஞ்சு பாருங்க. இந்த முட்டைகோஸ் சாதத்துல நம்ம மட்டன் மசாலா சேர்க்க போறதால அசைவ சுவைல சாப்பிடுறதுக்கே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த புரட்டாசி மாதத்திலேயே ஒரு தடவை இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுருங்க.
இந்த சூப்பரான ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டாங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்ய தோணும் இதுக்கு எந்த ஒரு சைட் டிஷ்ஷும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, வீட்ல இருக்க எல்லாருக்குமே இது ஒரு ஃபேவரட்டான கலவை சாதமா மாறிடும். வீட்ல இருக்க கூடிய குறைவான பொருட்களை வைத்து சூப்பரான இந்த முட்டைகோஸ் சாதம் ரெடி பண்ணிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சிம்பிளான முட்டைகோஸ் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முட்டைக்கோஸ் சாதம் | Egg Cabbage Rice Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் உதிரியாக வடித்த சாதம்
- 1/4 கப் முட்டைக்கோஸ்
- 1/4 கப் கேரட்
- 2 முட்டை
- 2 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பெரிய வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மட்டன் மசாலா
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியதும் நீள வாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
- பிறகு அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி மஞ்சள் தூள் உப்பு மட்டன் மசாலா சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- பிறகு அனைத்தும் நன்றாக வெந்த பிறகு சாதத்தை போட்டு நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டைக்கோஸ் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க ?