- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃப்ளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம்.
நமது வீட்டில் காலிப்ளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆனால் அதேயே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து மட்டன் கிரேவிக்கு இணையான சுவையில் காலிஃப்ளவர் கிரேவி எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால் இப்படி கிரீன் காலிஃப்ளவர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் காலிஃபிளவரை துண்டுகளாக நறுக்கி சூடான தண்ணீரில் உப்புடன் சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் விட்டு பின் தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும்.
பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா நன்கு வதங்கியதும் தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு காலிஃப்ளவரை மற்றும் தேங்காய் பால் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
பின் காலிஃப்ளவர் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஹோட்டல் ஸ்டைல் காலிஃப்ளவர் கிரேவி தயார்.






