- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான குழம்புகள் உண்டு. அதில் சாம்பார், பருப்பு குழம்பு, கார குழம்பு, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, மற்றும் கத்திரிக்காய் குழம்பை மக்கள் வழக்கமாக செய்து சுவைப்பார்கள். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பு. இந்த காலத்தில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சுண்டல் என்னும் கொண்டைக்கடலையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் இந்த கொண்டைக்கடலையை கத்திரிக்காயுடன் சேர்த்து கார குழம்பு செய்தால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த கார குழம்பை சாதம் மற்றும் அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இந்த கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் கொண்டைக்கடலை, வெங்காயம், மற்றும் தக்காளி, கத்தரிக்காய் இருந்தால் போதும் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமும் இன்றி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக செய்து உண்ணும் குழம்புகளுக்கு இவை ஒரு அருமையான மாற்றும் கூட.
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் கொண்டைக்கடலையை நன்கு கழுவி இரவு முழுதும் ஊற வைத்துக் கொள்ளவும். பின் இதனை குக்கரில் ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, வர மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து விடவும்.
குழம்பு சிறிது கொதித்ததும் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் மிகவும் சுவையான கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்பு தயார். இந்த குழம்பு பாரம்பரிய ருசியில் இருக்கும்.






