- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பாலக்கீரை வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அப்படி இருக்கும் போது இந்த பாலக் கீரையை வைத்து சூப்பரான இந்த சிம்பிளான ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கருப்பு சுண்டலை வைத்து செய்யக்கூடிய இந்த சூப்பரான டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாமல் இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பீஸ் ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி ட்ரை பண்ணுவீங்க அந்த அளவுக்கு செம சூப்பரா இருக்கும். பாலக்கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது ஆனா அப்படியே பாலக்கீரை கடையல் செஞ்சு கொடுத்தா சில பேருக்கு சுத்தமா பிடிக்காது. அந்த மாதிரி பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னா எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டு பாருங்கள்.
இது ரொம்பவே வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். தனியா நீங்க பாலக்கீரை கிரேவி செஞ்சிருப்பீங்க சுண்டல் கிரேவி செஞ்சிருப்பீங்க ஆனா இது ரெண்டும் சேர்த்து செய்ய போறது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். இது நல்லா இருக்குமா அப்படின்னு யோசிக்காதீங்க கண்டிப்பா செஞ்சு பாருங்க உங்களுக்கு எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான சென்னா பாலக் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் பாலக்கீரையை தண்ணீரில் சேர்த்து வேக வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கியதும் அரைத்து வைத்துள்ள பாலக் கீரை விழுதை சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் கரம் மசாலா உப்பு கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைக்கவும்.
எட்டு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்த சுண்டலை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா பாலக் மசாலா தயார்.






