உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி சீஸ் ரோல் செய்து கொடுங்கள் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட‌ விரும்பி சாப்பிடுவார்கள்!!!

- Advertisement -

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது. இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்தி என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது.

-விளம்பரம்-

சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி சீஸ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம். இவை அலுவலகங்களுக்கோ அல்லது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்து கொடுத்து அனுப்புவதற்கு உகந்தது. பொதுவாகவே சப்பாத்திகள் உடம்பிற்கு மிகவும் நல்லது. கடைகளில் விற்கப்படும் சீஸ் ரோல் செய்வது பெரிய கம்பு சுத்துற வேலை எல்லாம் ஒன்றும் இல்லைங்க! வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் இதை செய்யலாம்.

- Advertisement -

இதை செய்வதற்கு சில காய்கறிகள் நமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒருமுறை நீங்கள் செய்து பாருங்கள் இனி பிரைட் ரைஸ், பீட்சா, இதன்‌ வரிசையில் சப்பாத்தி சீஸ் ரோல் செய்வதும் சுலபமாக மாறிவிடும். சப்பாத்தி சீஸ் ரோலில் காய்கறிகளையும் சேர்த்து செய்வதினால் இவை மேலும் சத்தானதாகின்றன. சீஸ் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சீஸ் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

சப்பாத்தி சீஸ் ரோல் | Chapati Cheese Roll Recipe In Tamil

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல மேலை நாடுகளில் குடியேறிய இந்திய வம்சாவளியினரால் பிரபலம் அடைந்தது. இப்பொழுது உலகம் முழுவதும் சப்பாத்தி என உணவுப் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி மவுசு இருக்கின்றது. சப்பாத்திகளை வழக்கமாக உண்பவர்களுக்கு ஒரு சேஞ்சுக்காக சப்பாத்தி சீஸ் ரோல் ஆக செய்து கொடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Chapati Cheese Roll
Yield: 3 People
Calories: 179kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 கேரட்
  • 1/4 கப் முட்டைக்கோஸ்
  • 2 வெங்காயம்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் மைதா மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் பால்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் பீட்ஸா சாஸ்
  • 1/4 கப் சீஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி
  • மல்லி இலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் கேரட், முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றை நன்கு கழுவி விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் கோதுமை மாவு, மைதா, மாவு, உப்பு, நெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு சூடான பால் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்‌ மாவை ஒரு துணியால் மூடி ஊற விடவும். பின் சிறிது நேரம் கழித்து சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சிறிதளவு நெய்‌ தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதன்மேல் பீட்ஸா சாஸ், சில்லி சாஸ் மற்றும் சீஸ் தூவி அழுத்தி விடவும்.‌ பின் இதனை ஒரு நிமிடம் தவாவில் போட்டு எடுத்தால் சீஸ் ஒட்டிக் கொள்ளும் அதன்பிறகு நறுக்கிய காய்கறிகள், கொத்தமல்லி தழை வைத்து அதன்மேல் புதினா சட்னி வைத்து உருட்டி கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சப்பாத்தி சீஸ் ரோல் தயார்.‌ இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 179kcal | Carbohydrates: 4.6g | Protein: 7.85g | Fat: 2.9g | Sodium: 298mg | Potassium: 196mg | Fiber: 3.2g | Vitamin A: 80IU | Vitamin C: 137mg | Calcium: 36mg | Iron: 22mg

இதனையும் படியுங்கள் : ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!