சிக்கன் லெக் பீஸ் வாங்கி அதுல நல்லா சிக்கன் 65 பொடி போட்டு வறுத்து சாப்பிட்டு இருப்பீங்க இல்ல நான் சிக்கன் 65 வாங்கி அதுல குழம்பு வச்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இப்ப நம்ம செய்யப் போற ரெசிபி ஃபுல்லாவே வேற மாதிரி ஒரு ரெசிபி. சிக்கன் லெக் வாங்கி அத நல்லா வேக வச்சு கறியை மட்டும் உதிர்த்து போட்டு அதுல சில மசாலாக்கள் சேர்த்து சீஸ் சேர்த்து மறுபடியும் அதை சிக்கன் லெக் பீஸ் மாதிரி மாத்தி பொரிச்சு எடுத்தா அவ்ளோ சூப்பரா இருக்கும். அத பிச்சு சாப்பிடும் போது உள்ள இருந்து சீஸ் அப்படியே மெல்ட் ஆகி வரும். அது சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். முக்கியமா குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஸ்னாக்ஸ் இப்படி செஞ்சு கொடுங்க.
கண்டிப்பா சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். முக்கியமா குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரியான ரெசிபியை அடிக்கடி செஞ்சு கொடுத்துகிட்டே இருக்கணும் அந்த வகையில் இதை மட்டும் செஞ்சு கொடுங்க கண்டிப்பா குழந்தைகளுக்கு ரொம்ப ஃபேவரட் ஆகவே மாறிடும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வீட்ல இருக்க கூடிய பெரியவங்களுமே விரும்பி சாப்பிடுவாங்க. இது மேல நல்ல கிறிஸ்ப்பியா உள்ள சீஸியா சாஃப்ட் ஆக சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல இருக்க கூட செஞ்சு சாப்பிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
இத எல்லாரும் வீட்ல இருக்கும்போது செஞ்சு ஈவினிங் டைம்ல சாப்பிடலாம். இத சைடு டிஷ்ஷா வெச்சு சாப்பிடணும் அப்படின்னாலும் சாப்பிடலாம் ஆனால் சைடிஷ் ஆக சாப்பிடுவதை விட சும்மா ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிட தான் சூப்பரா இருக்கும். கே எஃப் சி சிக்கன்,சிக்கன் நக்கட்ஸ் இதெல்லாம் சாப்பிடுற மாதிரி இந்த சிக்கனையும் அப்படி தான் சாப்பிடணும். இந்த மாதிரியான ஸ்டைலில் சாப்பிடணும்னா ஹோட்டல்ல போய் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல சமைக்க முடியும். அந்த ரெசிபி தான் இது. இப்ப வாங்க இந்த சுவையான சீஸி சிக்கன் லெக் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
சீஸி சிக்கன் லெக் | Cheesy Chicken Leg Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 5 சிக்கன் லெக் பீஸ்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- சீஸ் தேவையான அளவு
- 2 முட்டை
- ப்ரெட் க்ரம்ப்ஸ் தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- சிக்கன் லெக்கை நன்றாக வேக வைத்து எடுத்து கறியை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- அதனுடன் மிளகாய் தூள் சோள மாவு கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனை உருட்டி தட்டி அதில் சீஸ் வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள சிக்கன் எலும்பை அதற்கு நடுவே வைத்து நன்றாக பந்து போன்று உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஊற்றி அதில் தயார் செய்து வைத்துள்ளதை முக்கி எடுத்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சீஸி சிக்கன் லெக் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சிக்கன் தேங்காய் ரோஸ்ட் கேரளா ஸ்டைல்ல ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க!!