- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், தக்காளி பிரியாணி, மட்டன் பிரியாணி ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம் இன்று பார்க்க இருப்பது செட்டிநாடு காளான் பிரியாணி. பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன், காளான் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப் படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது.
ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். ஆனால் செட்டிநாடு பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்காக இந்த செட்டிநாடு காளான் பிரியாணி ரெசிபி. காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த செட்டிநாடு காளான் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில் இந்த பிரியாணியை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம். இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மஷ்ரூம் ஆம்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் நறுக்கிய காளான், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி தயார்.






