- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழங்கு பொரியலை கட்டாயம் விரும்பி உண்பார்கள். குறிப்பாக குழந்தைகள். பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து விதமான உணவுகளுக்குமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு.
ஏதேனும் பண்டிகை என்றால் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் உருளைக்கிழங்கை கொண்டு ஒரு ரெசிபியாவது செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் உங்களுக்கு உருளைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்ததையே செய்து போர் அடித்திருந்தால், அடுத்தமுறை உருளைக்கிழங்கை கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் உருளை மசாலா செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இதனை பூரி மற்றும் சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு மசாலா, பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும் போதே வாசனை பசியைத் தூண்டும். பொதுவாக உருளைக்கிழங்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான செட்டிநாடு உருளை மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு உருளை மசாலா தயார்.






