- Advertisement -
இரவு டின்னருக்கு ருசியான சிக்கன் கைமா ரொட்டி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
சிக்கன் கைமா ரொட்டி | Chicken Keema Roll Recipe In Tamil
இரவு டின்னருக்கு ருசியான சிக்கன் கைமா ரொட்டி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கோதுமை மாவு
- 250 கிராம் கோழி கறி
- 1 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் கறித்தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- எண்ணெய் பொரிப்பதற்கு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். மற்ற தேவையான அணைத்து பொருட்களும் தயாராக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு கறித்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
- இந்த சிக்கன் கலவையுடன் அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை பிரட்டி விடவும்.
- சிக்கன் வெந்ததும் அதனை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அதனை சப்பாத்தி போல் தேய்த்து தவாவில் சுட்டு எடுத்துக்கொள்ளவும்.
- சுட்ட சாபத்தில் நடுவில் செய்து வைத்துள்ள சிக்கன் கலவையை கொஞ்சம் வைத்து சப்பாத்தியை உருட்டிக்கொள்ளவும்.
- பிறகு பரிமாறவும்.