- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Chinese
- Course
- Breakfast, dinner
காலத்திற்கேற்றவாறு நம்முடைய வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டு வருகிறது, அந்த வகையில் நம்முடைய உணவு முறைகளும் மாறிவிட்டது. பல்வேறு வகையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதில் பெரும்பாலும் துரித உணவுகளான பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவை இடம்பெறும். இந்த நூடுல்ஸ் வகை உணவுகள் சீன நாட்டு உணவு முறைகளில் ஒன்று. இது இப்போது பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
பலரும் விதவிதமாக சிக்கனை சமைத்து சாப்பிட விரும்புவர். தற்போது பாஸ்ட் புட் துரித உணவு கடைகளில் இந்த சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் தான். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும். இதில் அதிகப்படியான மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சிக்கன் 65 அனைவருக்கும் பிடிக்கும் அதனை விட இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிக்கன் நூடுல்ஸ். நூடுல்ஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நன்மையை அளிக்கும். அதனை விட நாம் செய்தால் அதில் சுத்தமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் இருக்கும். குழந்தைகளின் டிபன் பாக்ஸில் வைப்பதற்கும் இது ஒரு நல்ல சிற்றுண்டி. வேகவைத்த நூடுல்ஸுடன் சிக்கன் இந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. நூடுல்ஸ் பொதுவாக குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால் வீட்டில் சிக்கன் நூடுல்ஸ் செய்து சாப்பிடுங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸை உடைத்து சேர்த்து அதனுடன் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி ஆற விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும்.
இதனுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
காய்கறிகள் சிறிது வெந்ததும் பின் சிக்கன் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஆறிய நூடுல்ஸ் சேர்த்து வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விட்டு சூடாகப் பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார்.






