சிக்கன் மீது விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். சிக்கனில் அதிக அளவு புரதம் இருப்பதனால் மட்டுமல்லாது அதோட சுவைக்காகவும் நிறைய பேரு சிக்கன் மேலே விருப்பமுள்ளவர்களாக இருப்பாங்க. காரணம் இறைச்சி அப்படின்னு சொன்னாலே மட்டன் வாங்கி சாப்பிடுறவங்க மீன் வாங்கி சாப்பிடுறவங்களை விட சிக்கன் வாங்கி சாப்பிடறவங்களோட அளவு மிகவும் அதிகம். இந்த சிக்கனில் அதிக அளவு புரத சத்தும் இருக்கின்றது. இந்த புரதச்சத்து உடலுக்கு அதிக அளவு உபயோகப்படுகிறது. சிக்கன் நம்ம அன்றாட உணவுகளை அதை செய்து கொள்ள ஆரம்பிச்சாச்சு.
என்னதான் சிக்கன்ல குழம்பு வச்சு சாப்பிட்டாலும் பிரியாணி பண்ணி சாப்பிட்டாலும் அந்த சிக்கன்ல சைடிஸ் அப்படிங்கிற ஒரு விஷயம் தான் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு ஒரு விதமான வறுவல், தொக்குகள், பொரியல்கள் அப்படின்னு விதவிதமா இந்த சிக்கன் வச்சு பலவிதமான உணவு பொருட்கள் வந்துட்டு இருக்கு அதனால சிக்கன் மேலே இருக்கிற விருப்பம் இன்னும் அதிகமாயிட்டு தான் இருக்கு காரணம் அதோடு சுவையை நம்ம மேலும் மேலும் சுவை கூட்டிக்கொண்டே இருக்கிறோம்.
பலவித பொருட்களை வித்தியாச வித்தியாசமான கலவையில கலந்து ரொம்பவே சுவையா சிக்கன் உணவுகள் செய்து சாப்பிடுவது நிறைய பேருக்கு பிடிக்கும். அப்படித்தான் இன்னைக்கு நம்ம ரொம்ப சுவையா இந்த சிக்கன்ல ஒரு கார சாரமான மிளகு வறுவல் செய்ய போறோம். இன்று சிக்கனில் மிளகு வறுவல் செய்து சாப்பிட இருக்கிறோம். இந்த சிக்கன் மிளகு வறுவல் மிகவும் சுவையுடையதாக சுலபமாக எப்படி வீட்டில் தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
சிக்கன் மிளகு வறுவல் | Chicken Pepper Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ சிக்கன்
- 10 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 2 ஸ்பூன் மிளகுதூள்
- 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கழுவி வைத்துள்ள சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு போட்டு பிசறி தனியாக வைத்து விட வேண்டும்.
- ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு மஞ்சள் தூள் போட்டு வைத்துள்ளசிக்கனை அலசி விட வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் சீரகத்தூள், மிளகுத்தூள்,உப்பு மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக பிசறி கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ளபூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அலில் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.சிக்கன் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்கவேண்டாம் சிக்கனை கிளறிவிட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
- அவ்வப்போது மூடியை திறந்து நாளை கிளறி விட்டுக் கொண்டிருக்கவும். தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாகவெந்த பிறகு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி கிளறி விடவும்.
- அவ்வளவுதான் பரிமாறுவதற்கு சுவையான ருசியான சிக்கன் மிளகு வறுவல் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள்: காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!