- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
சிக்கன் புலாவ்சிக்கன் உணவுகள்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் சிக்கன் உணவுகள்ல வறுவல், குழம்பு, 65 ,பக்கோடா அப்படின்னு நிறைய இருந்தாலும் எல்லாத்தையும் விட நமக்கு ஃபர்ஸ்ட் பிளேஸ்ல பிடிக்கிற விஷயம் அப்படின்னு பார்த்தா அது பிரியாணியும் புலாவும் தான். அப்படி பிரியாணியும் , புலாவும் என்னதான் வீட்ல செய்தாலும் அதோட சுவை நமக்கு கடைகளில் சாப்பிடுற மாதிரி கிடைக்கலைன்னு வருத்தப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்க.
இப்படிப்பட்டவர்களுக்காக தான் அதே சுவையில வீட்ல எப்படி சிக்கன் புலாவ் செய்வது எப்படி என்பதை இன்னைக்கு பார்க்க போறோம். இந்த புலாவ் ரொம்பவே ஈஸியாகவும் டேஸ்டியாவும் கடைகளில் சாப்பிடும் புலாவ் மாதிரி ரொம்ப ருசியாகவும் இருக்கும். சரி வாங்க அந்த கடையில செய்ற மாதிரியான புலாவை வீட்ல எப்படி சுலபமா செய்யறது அப்படிங்கறது தெரிஞ்சுக்கலாம். சுவையான சிக்கன் குழம்பு ரொம்பவே சுலபமா எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நம்ம செய்ய போறோம்.
அதுவும் இந்த சிக்கன் புலாவ் நீங்க செய்தீங்கன்னா செய்தது அப்படியே காலியாகும் அளவிற்கு விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. அவங்களோட விருப்பமும் வயிறு நிறைய சாப்பிடுவதும் நம்ம செய்ற சாப்பாட்டுக்காக பெரிய பெரிய பரிசு நமக்கு. ஆகையினால அவங்க ருசித்து சாப்பிடறதை செய்த சாப்பாட்டுக்கான ஒரு நல்ல பரிசு தான் . அப்படி நம்ம செய்ல சாப்பாட்டா ருசிச்சு சாப்பிடற மாதிரியான புலாவ் தான் இப்போ பண்ண போற சிக்கன் புலாவ் வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Ingredients
Method
இந்த சிக்கன் புலாவ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொண்டு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி 20நிமிடம் வரை ஊற வைக்கவும்.
பிறகு அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு சேர்த்துதாளிக்கவும்.
பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்பு அதனுடன் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக பூண்டு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சேர்ந்த பொருட்கள் நன்கு வதங்கியவுடன் சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
சிக்கன் சிறிது நேரம் வெந்தவுடன் அதில் தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். தயிர் சேர்த்த பிறகு அவற்றில் அரிசியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின்பு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு மீதியுள்ள கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும், 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான சிக்கன் புலாவ் தயார். சுடசுட அனைவருக்கும் பரிமாறவும்.






