- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Hyderabad, Indian
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். ஆனால் உங்களுக்கு மதியம் வித்தியாசமாக என்ன சாதம் செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சிக்கன் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான சிக்கன் தஹாரி செய்யுங்கள்.
சிக்கன் தஹாரி என்பது நறுமணமிக்க மசாலாக்கள், சிக்கன் துண்டுகள் மற்றும் பாசுமதி அரிசி ஆகியவற்றை ஒன்றிணைத்துத் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான ஒன் பாட் உணவாகும். இது ஹைதராபாத் மற்றும் மைசூர் பகுதிகளில் மிகவும் புகழ்பெற்றது. பிரியாணியைப் போன்ற தோற்றமும் சுவையும் கொண்டிருந்தாலும், செய்முறையில் எளிமையாகவும், மசாலாக்கள் அரிசியுடன் நேரடியாகக் கலந்து வேகவைக்கப்படுவதாலும் இது தனித்துவமான சுவையைப் பெறுகிறது.
வீட்டு விசேஷங்களுக்கும், மதிய உணவிற்கும் ஏற்ற இந்த சத்தான உணவு, நாவிற்கு விருந்தளிப்பதோடு மனதிற்கும் நிறைவைத் தரும். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மட்டும் பிடித்ததாக இருக்காது பெரியவர்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும் அதனால் ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். இந்த சிக்கன் தஹாரி ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சிக்கன் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது சுவையான ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் தஹாரி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தயிர், வெந்தயக்கீரை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பின் சிக்கனை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, கருஞ்சீரகம், சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு சாதம் சிறிது வெந்து வந்ததும் எலுமிச்சை சாறு, கஸ்தூரி மேத்தி, கரம் மசாலா சேர்த்து கலந்து தம் வைத்து விடவும். பின் நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் தஹாரி தயார்.






