- Advertisement -
Home அசைவம் சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!

சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!

- Advertisement -

ஊறுகாய் பொதுவா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு சொல்லுவாங்க. ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே இந்த ஊறுகாய் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ஊறுகாய் ரெசிபி கடைலயும் வாங்கலாம் வீட்லயும் செய்யலாம் ஆனா கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுறது தான் நல்லது. அந்த வகையில எலுமிச்சை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், பூண்டு ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் அப்படின்னு நிறைய ஊறுகாய் வகைகள் இருக்கு.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அசைவத்துல ஊறுகாய் செய்யலாம். மீன் ஊறுகாய் இறால் ஊறுகாய், சிக்கன் ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த வகையில இன்னைக்கு சிக்கன் தொக்கு ஊறுகாய் செய்ய போறோம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு மாதம் வரைக்கும் இதை ஃப்ரிட்ஜுக்குள்ள ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம். அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இத செஞ்ச உடனே சாப்பிடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து சாப்பிட்டால் இன்னும் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ஊறுகாயை நல்லெண்ணெயில் தான் செய்யணும் அப்பதான் சூப்பரா இருக்கும்.

- Advertisement -

நல்லெண்ணெயில் செய்யும் போது வாசனை அவ்வளவு சூப்பரா இருக்கும் சுவையும் அதிகரிக்கும். பொதுவாக ஊறுகாய் என்றாலே நல்லெண்ணெயில் செய்தால் தான் சூப்பராக இருக்கும் அந்த வகையில் இந்த நல்லெண்ணெய் வைத்து ஊறுகாய் செய்யும் போது நான்வெஜ் ஊறுகாய் செய்யும் போது ரொம்ப டேஸ்டா இருக்கும் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த ஊறுகாய்க்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு அதுக்கப்புறம் செய்ய போறோம். இந்த ஊறுகாய் ரெசிபி ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. இதுக்கு சிக்கன வேக வச்சு கைலயே நல்லா உதிர்த்து விடணும். அப்பதான் நல்லா இருக்கும். ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் தொக்கு ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

சிக்கன் தொக்கு ஊறுகாய் | Chicken Thokku Pickle Recipe In Tamil

ஊறுகாய் பொதுவா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு சொல்லுவாங்க. ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே இந்த ஊறுகாய் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ஊறுகாய் ரெசிபி கடைலயும் வாங்கலாம் வீட்லயும் செய்யலாம் ஆனா கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுறது தான் நல்லது. அந்த வகையில எலுமிச்சை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், பூண்டு ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் அப்படின்னு நிறைய ஊறுகாய் வகைகள் இருக்கு. இது ஒரு பக்கம் இருந்தாலும் அசைவத்துல ஊறுகாய் செய்யலாம். மீன் ஊறுகாய் இறால் ஊறுகாய், சிக்கன் ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த வகையில இன்னைக்கு சிக்கன் தொக்கு ஊறுகாய் செய்ய போறோம். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Chicken Thokku Pickle
Yield: 6 People
Calories: 128kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி சிக்கன்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 கிராம்பு 
  • 1 பட்டை
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு 
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 எலுமிச்சை பழம்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் சிக்கன் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்‌.
  • ஒரு கடாயில் சோம்பு சீரகம், மல்லி, மிளகு கடலைப்பருப்பு கடுகு வெந்தயம் பட்டை கிராம்பு அனைத்தையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு சிக்கனை உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சிக்கனை சேர்த்து சிவக்க வதக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு மிளகாய் தூள் அரைத்து வைத்த பொடி உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கினால் சுவையான சிக்கன் தொக்கு ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 128kcal | Carbohydrates: 2.4g | Protein: 16g | Fat: 5.4g | Sodium: 174mg | Potassium: 222mg | Fiber: 17g | Vitamin A: 41IU | Vitamin C: 157mg | Calcium: 23mg | Iron: 19mg

இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!