- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மீன் எடுத்தாலே எப்பவும் மீன் குழம்பு மீன் வருவல் அப்படின்னு செஞ்சுதான் பழக்கம் ஆனா இனிமேல் மீன் வாங்குனா உங்களால நிறைய வேலை பார்க்க முடியாது அப்படின்னு யோசிச்சீங்கன்னா, இந்த மாதிரி ஒரு சூப்பரான சில்லி ஃபிஷ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. நல்லா சுட சுட காரசாரமா ரசம் வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த சில்லி ஃபிஷ் வச்சு சாப்பிடுங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
நார்மல் நம்ம மீன் வறுவல் செய்ற மாதிரி ஏதாவது இருக்கும் ஆனா இதுக்கு முள் இல்லாத மீன் தேவைப்படும் சின்ன சின்ன துண்டுகளாக சேர்க்கிறதால சிக்கன் மாதிரியே சூப்பரா இருக்கும் மீன் சில பேருக்கு சாப்பிட பிடிக்காது ஆனா அந்த மாதிரி சாப்பிட பிடிக்காதவங்களே இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க. அவ்ளோ டேஸ்டான இந்த சில்லி ஃபிஷ் ரெசிபியை கண்டிப்பாக வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க இதை செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி.
இதுக்கு நிறைய நேரம் தேவை படாது இதுக்கு மசாலா போட்டு நல்லா பிரட்டி வச்சுட்டு நல்லா ஊற வச்சுடனும். அதுக்கப்புறம் பொரிச்சு எடுத்தா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். மசாலா பிரியாம நல்லா மீன் கூட ஒட்டி சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சுருங்க.
அப்பதான் இந்த டேஸ்ட் உங்களுக்கு தெரியும். மீன் குழம்பு வைக்கும் போது கூட இந்த ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம். அந்த மீன் குழம்புக்கும் சில்லி பிஷ்க்கும் சாப்பிடறதுக்கே அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் கண்டிப்பா இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சில்லி ஃபிஷ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை மீன் வாங்கினால் குழம்பு வைக்காமல் ஒரு முறை இந்த மீன் ஆம்லேட் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
மீனை கழுவி சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் காஷ்மீர் மிளகாய் தூள் மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சோள மாவு சேர்த்து முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்றாக கலந்து மீனை போட்டு பிரட்டி எடுக்கவும்.
அரை மணி நேரம் ஊற வைத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சில்லி ஃபிஷ் தயார்.






