- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
முட்டை வச்சு முட்டை கிரேவி முட்டை குழம்பு முட்டை வறுவல் இதெல்லாம் செய்திருப்பீங்க ஆனால் முட்டை வச்சு எப்போமே ஒரே மாதிரியா ரெசிபி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு பாருங்க. ஆம்லெட் ஆப் பாயில் அடிக்கடி போட்டு சாப்பிடுவோம். தினமும் கூட ஒரு சிலர் போட்டு சாப்பிடுவாங்க. அந்த ஆம்லெட் சாப்பிட்டு ஒரு சிலருக்கு போர் அடிச்சு போய் இருந்துச்சுன்னா அதை வச்சு சூப்பரான இந்த மாதிரி ஒரு சில்லி ஆம்லெட் செஞ்சு பாருங்க. இத அப்படியே கூட ஸ்னாக்ஸ் மாதிரி சாப்பிடலாம்.
வீட்ல ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி செய்யும்போது அதுக்கு சைடு டிஷ்ஷாக இதனை செய்து சாப்பிடலாம். ரொம்ப வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப எல்லாம் எல்லார் வீட்லயும் சில்லி சாஸ் தக்காளி சாஸ் எல்லாமே இருக்கும் அதனால சிம்பிள் ஆன இந்த ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.
டேஸ்டான ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமை ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிக்கடி செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு கொடுத்தா சாப்பிடுவதற்கு இன்ட்ரெஸ்ட்டா சாப்பிடுவாங்க. எப்பவும் ஒரே மாதிரியா செஞ்சு கொடுத்தாதான் சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான சில்லி ஆம்லெட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை சட்டியில் ஆம்லெட் ஆக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பூண்டு பற்களையும் சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
சோளமாவை கரைத்து சேர்த்து நன்றாக கொதித்ததும் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் துவி இறக்கினால் சுவையான ஆம்லெட் சில்லி தயார்.






