- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இட்லி தோசைக்கு ரொம்ப சட்டுனு செய்யக்கூடிய ஒரு சட்னி அப்படின்னா அது தேங்காய் சட்னி தான். இந்த சட்னி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க. தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு தேங்காய் சட்னி தான் ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி தேங்காய் சட்னி ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த சட்னியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லிக்கு வச்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும் தோசைக்கும் அட்டகாசமா இருக்கும். இதுல நம்ம கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் எல்லாமே சேர்த்து அரைக்க போறதால உடம்புக்கும் ரொம்ப ரொம்ப நல்லது உடம்பில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளும் அடங்கிய டேஸ்ட்டான இந்த தேங்காய் சட்னியை நல்லா தண்ணி மாதிரி செஞ்சு இட்லி மேல ஊத்தி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக டேஸ்ட் அட்டகாசமாகவே இருக்கும். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா நீங்க தேங்காய் சட்னி இந்த மாதிரி தான் செய்வீங்க. இதுக்கு நம்ம கொத்தமல்லி இலைகள் சேர்க்கும் போது தண்டு சேர்க்கக்கூடாது இலைகள் மட்டும் தான் சேர்க்கணும் கடைசியா நம்ம தாளிச்சு கொட்டும் போது வாசனையா சாப்பிடுறதுக்கே ஆசையா இருக்கும்.
அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த சட்னியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த சட்னி கண்டிப்பா வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க. எப்பவும் ஒரே மாதிரியா சட்னி அரைச்சு போர் அடிச்சு போச்சுன்னா கண்டிப்பா இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான டிஃபரண்டான தேங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கடலை பருப்பு சட்னி செய்வது எப்படி
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கடலை தேங்காய் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் உப்பு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை காய்ந்து மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்ததில் சேர்த்து விட்டால் சுவையான வித்தியாசமான தேங்காய் சட்னி தயார்.






