தேங்காய் தோசையா அது என்ன அப்படின்னு யோசிக்கிறீங்களா? நம்ம பொதுவாவே என்னதான் இட்லி தோசை அடிக்கடி சாப்பிட்டாலும் இட்லியை விட நிறைய பேருக்கு தோசை தான் ரொம்ப பிடிக்கும். காரணம் தோசை மொறு மொறுன்னு இருக்கும்.நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுன்னு சுட்டுக்கொடுத்தால் எத்தனை தோசை வேணும்னாலும் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். தோசையில நிறைய வெரைட்டிஸ் இருக்கு மசாலா தோசை பொடி தோசை முட்டை தோசை வெங்காய தோசை அப்படி என்றால் சொல்லிக் கொண்டே போகலாம்.
என்னதான் ஒரு சிலருக்கு மொரு மொருட தோசை புடிச்சாலும் இன்னும் ஒரு சிலருக்கு ஊத்தப்பம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில இப்ப நம்ம செய்ய போற இந்த தேங்காய் தோசை கூட ஊத்தப்பம் மாதிரி தான் இருக்கும் சாப்பிடுறதுக்கு ரொம்ப சாப்டா அவ்வளவு அட்டகாசமா இருக்கும். உங்களுக்கு ஊத்தப்பம் சாப்பிட பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இந்த தேங்காய் தோசையை உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். தேங்காய் தோசை ஒரு டிஃபரண்டான டேஸ்ட்ல தேங்காய் சட்னி தக்காளி சட்னி சாம்பார் எது சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டாலும் அட்டகாசமான சுவைல இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான டிஃபரண்டான தேங்காய் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேங்காய் தோசை | Coconut Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் பச்சரிசி
- 1 கப் அவல்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் பச்சரிசி வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இப்பொழுது அதனை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அவலை அரை மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இரண்டு மாவு கலவையையும் ஒன்றாக சேர்த்து எட்டு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
- பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் தடவி ஊத்தப்ப மாதிரி ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். திருப்பி போடாமல் மிதமான தீயில் வைத்து சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாழைப்பழமும், கோதுமை மாவும் இருந்தால் சில நிமிடத்தில் இந்த தோசை தயார்!