
இன்றைய நவீன உலகில் கடன் இல்லாத நபர்களே கிடையாது. அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். பண பிரச்சனை, கடன் தொல்லை, ஒருவரை நம்பி பணம் அல்லது நகையை கொடுத்து ஏமாறுவது என்பது போன்ற பிரச்சனைகளில் சிக்கி உள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளனர். ஒரு சிலருக்கு கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஜாதகப்படி இயல்பாகவே கிரக அமைப்புகளின் அடிப்படையில் சிலருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு கடன் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றையும் இழந்து கடன் மட்டும் வைத்து கஷ்டப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வர எளிமையாக ஒரு பரிகாரத்தை இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடன் தீர தேங்காய் பரிகாரம்
ஆன்மீகத்தில், தேங்காய் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் தேங்காய் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் மற்றும் தடைகளையும் தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சமஸ்கிருதத்தில் தேங்காய் கடவுளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த தேங்காயை நாம் நம்முடைய வழிபாட்டில் பயன்படுத்தும் போது நமக்கிருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி செழிப்பு, ஆசீர்வாதம் மற்றும் வெற்றி ஆகியவற்றை கொண்டு வரும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பல மடங்கு சக்தி வாய்ந்த தேங்காய் பரிகாரம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பரிகாரம் செய்யும் முறை
பூலோகத்தின் கற்பகவிருட்சம் என்று தென்னை மரத்தை குறிப்பிடுகிறது வேதங்கள். அப்படிப்பட்ட தென்னை மரத்தில் இருந்து பெறக்கூடியது தான் தேங்காய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தேங்காயை வைத்து பரிகாரம் செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த பரிகாரம் செய்வதற்கு மட்டை தேங்காய் அல்லது உரித்த தேங்காயை வாங்கி அதனை ஒரு சிவப்பு நிற துணியில் கட்டி விடுங்கள். ஆலமரம் அல்லது அரசமரம் உங்களுக்கு எது பக்கமாக இருக்கிறதோ அந்த மரத்திற்கு சென்று கையில் தேங்காயை வைத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த தேங்காயை மரத்தில் கட்டி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் செய்வது நல்லது.
இந்த பரிகாரத்தை முடித்து விட்டு ஒரு சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரின் கோவிலுக்குச் சென்று 9 தேங்காய் கொண்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விநாயகரை 9 முறை வலம் வர வேண்டும். தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்கிழமை இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தாலலே போதும் கடனை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். அதனால் இந்த வழிபாட்டை மனதார நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ்வீர்கள்.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரத்தை கொடுக்கும் தாமரை பூ பரிகாரம்!!



