கண் திருஷ்டி என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடியது. வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு கண் திருஷ்டி தான் காரணமாக இருக்கும் கண் திருஷ்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் பெறுவதற்கு நோய்நொடி போன்ற பிரச்சனைகள் தீர்வதற்கு வீட்டு லட்சுமி கடாட்சம் உயர்வதற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு வாரத்தில் ஒரு முறை திருஷ்டி சுற்றி போட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மாதத்தில் ஒருமுறையாவது திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதி என்று திருஷ்டி சுற்றி போடலாம் அப்படி இல்லை என்றால் விடுமுறை நாட்களில் கூட திருஷ்டி சுற்றி போடலாம். அந்த வகையில் சக்தி வாய்ந்த திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

திருஷ்டி கழிக்கும் முறை
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் தேங்காய். தேங்காயில் உள்ள கண் பகுதியில் ஒரு ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும் அதில் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து விட்டு குங்குமத்தை தண்ணீரில் கரைத்து தேங்காய் கொள் ஊற்ற வேண்டும் பிறகு மெழுகு வைத்து தேங்காய் கண்ணு ஒட்டையை மூடி விட வேண்டும். பிறகு உங்களுடைய வீட்டை சுற்றி நிலை வாசலுக்கு பக்கத்தில் போய் நின்று நிலை வாசலை மூன்று முறை சுற்றி வராகி அம்மனை மனதார நினைத்து துர்சக்திகள் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்று மனதார நினைத்துக் கொண்டு தேங்காய் கொண்டு போய் வீட்டிற்கு வெளிப்பக்கத்தில் உடைத்து விட வேண்டும்.
பரிகாரத்தால் ஏற்படும் நன்மைகள்
தேங்காய் உள்ளே இருக்கக்கூடிய சிவப்பு நிற குங்குமம் வெளியே சிதறினால் பார்த்தவர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போய் இந்த தேங்காயை உடைத்து விடலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று இதனை செய்யலாம். இதனை செய்வதால் வீட்டில் சுபிட்சம் பெருகும். வீட்டில் நோய் நொடிகள் யாருக்குமே வராது. முழு மனதோடு கண் திருஷ்டிகளை போக்குவதற்கு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். கண் திருஷ்டிகளை போக்குவதற்கு நிறைய முறைகள் இருந்தாலும் இது மிகவும் சக்தி வாய்ந்தது எனவே நிச்சயமாக இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்




