கனவன் மனைவி சண்டை தீர்ந்து மீண்டும் சேர! சிறிது கடுகு இருந்தால் மட்டும் போதும்!

- Advertisement -

பொதுவாக நமது மனதிற்கு பிடித்தவர்கள் யாராக இருப்பினும், அது கணவன் மனைவியாக, உடன் பிறந்த சகோதர சகோதரிகள், நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என நம் வாழ்க்கையை இவர்களை சுற்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ்க்கையில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வதற்கு மனதிற்கு பிடித்தவர்களுடன் ஒன்று சேர அந்த வாழ்க்கை வாழும் போது தான் அந்த வாழ்க்கையை முழுமையாக நம்மால் அனுபவிக்க இயலும். அப்படி நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்கள் நம்மிடம் பேசவில்லை என்றால் மீண்டும் அவர்களிடம் சேர்வதற்காக ஆன்மீகத்தில் சொல்லப்பட்ட பரிகாரத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

கடுகு

நாம் வீட்டில் சமையலுக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கடுகு ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்களை செய்யும்போது நல்ல பலனை கொடுக்கக் கூடியது. அதில் நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் கடுகை வைத்து தாந்திரீக, ஆன்மீக பரிகாரங்கள் செய்யலாம். அதேபோல் வெண் கடுகு வைத்து கண் திருஷ்டி கழிப்பது போன்று தாந்திரீக பரிகாரங்களை செய்யலாம். ஆகையால் நாம் மனதிற்கு பிடித்தவர்களுடனா மீண்டும் சேர்வதற்காக கடுகை வைத்து தாந்த்ரீக முறையில் எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தான் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் நாம் தெளிவாக காண இருக்கிறோம் வாருங்கள் பார்க்கலாம்.

- Advertisement -

ஒன்பது முறை

பரிகாரத்தை தேய்பிறையுடன் கூடிய நாட்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது அஷ்டமி, அமாவாசை, பஞ்சமி போன்ற திதிகளில் இந்த பரிகாரத்தை ஆரம்பிப்பது சிறப்பானதாக இருக்கும். இப்படி இந்த பரிகாரத்தை இந்த தேய்பிறை நாட்களில் ஆரம்பித்து ஒன்பது முறை செய்ய வேண்டும். இப்படி நீங்கள் ஒன்பது முறை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொத்தமாக ஒன்பது முறை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்படி இந்த பரிகாரத்தை நீங்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம் சூரியன் மறைந்த பிறகு செய்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடியது.

-விளம்பரம்-

பரிகாரம் செய்முறை

சரி வாருங்கள் பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். எளிமையான பரிகாரம் தான் இதை செய்வதற்கு சாம்பிராணிக்கு தேங்காய் சிட்டை எரிப்பது போல் ஒன்று அல்லது இரண்டு தேங்காய் சிரட்டையை ஏரித்து கொள்ளுங்கள் இல்லை வீட்டில் விறகு இருக்கிறது என்றால் விறகையும் எரித்துக் கொள்ளலாம். எப்படி இந்த பரிகாரம் செய்யும் பொழுது விறகு அல்லது தேங்காய் சிரட்டை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவு வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகை எடுத்துக் கொண்டு யாருடன் மீண்டும் சேர விரும்புகிறீர்களோ, பேச விரும்புகிறீர்களோ அவரின் பெயரை உச்சரிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது நீங்க எரித்த பொருட்களை முன்பு அமர்ந்து கொண்டு நீங்கள் கடுக வைத்திருக்கும் கையை உங்களின் மார்புக்கு நேராக வைத்து கையை டைட்டாக மூடி கொள்ளுங்கள். பின்பு மனதார நீங்கள் சேர வேண்டும் என ஆசைப்படுகிற அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவரை நீங்கள் எப்படி பெயர் சொல்லி அழைப்பீர்களோ அந்த பெயரை சொல்லி உங்களால் எவ்வளவு தடவை உச்சரிக்க முடியுமா அத்தனை முறை அவர்களுடன் சேர வேண்டும் என்ற ஆசையுடன் அந்தப் பெயரை உச்சரியுங்கள். அப்படி அவர்களுடன் பேச வேண்டும் சேர வேண்டும் என்ற உங்களின் ஆசை மனதில் சுடர் விட்டு எரியும் வரை பெயரை உச்சரித்து உங்கள் கையில் இருக்கும் கடுகை அந்த கனலில் போட்டு விடுங்கள். பின் தீயில் போட்ட கடுகு வெடிக்க தொடங்கியவுடன். உங்களது ஆசையும் நிறைவேற ஆரம்பித்து விடும் நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here